மோசமா இருந்த அதே தோனிதான்.. இந்தியாவே பெருமைப்படவும் செஞ்சாரு.. முன்னாள் கேப்டனுக்கு வழங்கிய கவுரவம் குறித்து ரவி சாஸ்திரி

0
79

சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான சாதனைகளை செய்ததற்காக கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் என்கிற உயரிய கவுரவம் வழங்கும்.

இந்த வருடம் எம்எஸ் தோனிக்கு அந்த கவுரவம் கிடைத்திருப்பது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஐசிசி தோனிக்கு மரியாதை

இந்திய கிரிக்கெட் அணியின் பொக்கிஷமாக திகழ்ந்த எம்எஸ் தோனி, இந்திய அணிக்கு மூன்று விதமான ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த முதல் கேப்டன் என்ற பெருமையை வைத்திருக்கிறார். மேலும் இவர் தலைமையில் தான் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணி என்கிற கவுரவத்தை பெற்றது. மேலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பேட்டிங்கிலும் எம்எஸ் தோனி சிறப்பான சாதனைகளை படைத்திருக்கிறார்.

ஐசிசி தரும் இந்த கௌரவம் ஒரு கிரிக்கெட் வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்று 5 வருடங்கள் ஆகியிருக்க வேண்டும். 2020 ஆம் ஆண்டு எம் எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்ற நிலையில் அவருக்கு 5 ஆண்டுகள் கழித்து இந்த கௌரவம் கிடைத்திருக்கிறது. இது குறித்து பேசி இருக்கும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரான ரவி சாஸ்திரி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

தோனி குறித்து ரவி சாஸ்திரி

இது குறித்து அவர் கூறும் போது ” 0 ரன்னில் அவுட் ஆன எம்எஸ் தோனிதான் இந்திய அணிக்கு உலகக்கோப்பையையும் வென்று கொடுத்திருக்கிறார். இந்திய அணிக்காக சதம் அடித்த அதே தோனி தான், 200 ரன்களும் அடித்திருக்கிறார். எனவே அவரிடம் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. வெற்றி, தோல்வி என இரண்டையும் சரி சமமான விகிதத்தில் தோனி மிகச் சிறப்பாகவே கையாண்டு இருக்கிறார். அவர் இந்த விருதுக்கு மிகவும் தகுதியானவர்” என பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க:டிஎன்பிஎல் 2025.. சென்னை அணியை காப்பாற்றிய ஆர்சிபி வீரர்.. விஜய் சங்கர் அதிரடி.. 41 ரன்னில் நெல்லை அணியை வீழ்த்திய சிஎஸ்ஜி

இதுகுறித்து தோனி கூறும் போது “தலைமுறை தலைமுறையாகவும் உலகம் முழுவதிலும் இருந்து வரும் கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ஐசிசியின் ஹால் ஆப் பேமில் இடம் பெறுவது ஒரு மரியாதை. இது போன்ற எல்லா காலத்திலும் சிறந்த வீரர்களுடன் உங்கள் பெயரையும் விரைவில் கொள்வது என்பது ஒரு சிறப்பான ஒரு உணர்வாகும். அது என்றென்றும் என் மனதில் இருக்கும்” என தோனி பேசியிருக்கிறார்.

- Advertisement -