ஐபிஎல்-க்கு அடுத்து 2023ல் இந்திய அணி விளையாட இருக்கும் போட்டிகளின் முழு அட்டவணை பட்டியல்!

0
3683
ICT

உலகக் கிரிக்கெட்டில் தற்போது பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடர், இரண்டு நாட்களுக்கு முன்பு முடிவுக்கு வந்திருக்கிறது. இதை எடுத்து உலகக் கிரிக்கெட் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகிறது!

ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்ட இந்திய அணி நிர்வாகம் அடுத்து ஆஸ்திரேலியா அணி உடன் இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஜூன் மாதம் ஏழாம் தேதி மோதுகிறது.

- Advertisement -

இதற்கு அடுத்து எஞ்சி உள்ள இந்த வருடத்தின் மாதங்களில் இந்திய அணி விளையாட இருக்கும் போட்டிகளின் முழு அட்டவணைப் பட்டியலை இந்தச் சிறிய தொகுப்பில் பார்ப்போம்.

ஜூலை- ஆகஸ்ட் 2023:

வெஸ்ட் இண்டிஸ்க்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது. தொடர் உறுதி ஆக்கப்பட்டுள்ள நிலையில் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

- Advertisement -

செப்டம்பர், ஆசியக் கோப்பை 2023 :

இந்த வருட ஆசியக் கோப்பை பாகிஸ்தான் நடத்த இருக்கிறது. எனவே இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் அரசியல் பிரச்சனைகளால் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடியாது என்று அறிவித்திருக்கிறது. இது சம்பந்தமாக தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகள் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் இன்னும் நூறு சதவீத முடிவு எட்டப்படவில்லை. இறுதியில் பொதுவான இடத்தில் ஆசியக் கோப்பை நடைபெறலாம் என்கின்ற முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 2023 :

ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி உடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி சம்மதித்திருக்கிறது. இந்தத் தொடர் ஆஸ்திரேலியாவிற்கு உலகக்கோப்பைக்கு தயாராவதற்கு மிகவும் உதவிகரமான தொடராக இருக்கும்.

அக்டோபர் – நவம்பர் 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் :

இந்தியா முதன் முதலில் தனியாக நடத்த இருக்கும் முதல் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இதுவாகும். இதற்கு முன்பு பிற ஆசிய நாடுகளுடன் சேர்ந்து நடத்தி இருக்கிறது.

நவம்பர் – டிசம்பர் 2023:

ஒரே வருடத்தில் மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்குச் சுற்றுப் பயணம் செய்கிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி உடன் ஆஸ்திரேலியா அணி மோத இருக்கிறது.