நியூசி ஸ்டார் பவுலர் காயத்தால் விலகல்.. இந்திய அணிக்கு ஆதாயம்.. 2019 மறக்குமா நெஞ்சம்!

0
1293
Henry

நியூசிலாந்து அணிக்கு கவலை அளிக்கும் விஷயமாக அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மேட் ஹென்றி வலது தொடையில் ஹேம்ஸ்டிரிங் காயம் ஏற்பட்டு, நடப்பு உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

இவருடைய இடத்திற்கு வலது கை வேகப்பந்துவீச்சாளர் ஜேமிசன் தற்பொழுது கொண்டுவரப்பட்டு இருக்கிறார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

மேட் ஹென்றி மிகவும் துல்லியமான வேகப் பந்துவீச்சாளர். அவரிடம் நல்ல வேகம் இருந்தாலும் கட்டுப்பாடும் எப்பொழுதும் மிகச் சிறப்பாக இருக்கும். மேலும் ஸ்விங் கண்டிஷனில் தேவையான அளவிற்கு ஸ்விங் செய்யக்கூடியவர்.

2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா விக்கெட்டை உடனே எடுத்தது இவர்தான். மேலும் அதே ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் விக்கெட்டையும் கைப்பற்றினார்.

அந்த குறிப்பிட்ட உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு வலிமையான அடித்தளம் போட்டு வைத்தார். இதன் காரணமாகவே மற்ற பந்துவீச்சாளர்கள் வந்து இந்திய பேட்ஸ்மேன்கள் மேல் அழுத்தம் கொடுக்க முடிந்தது.

- Advertisement -

மேலும் தற்பொழுது இந்திய அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதேபோல் நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் உண்டு. இந்த காரணத்தினால் அரை இறுதியில் இந்த இரண்டு அணிகளுமே மோதிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றது.

எனவே இப்படியான நிலையில் மேட் ஹென்றி போன்ற ஒரு பந்துவீச்சாளரை நியூசிலாந்து அணி தவற விடுவது, குறிப்பாக அரை இறுதியில் தவறவிடுவது பெரிய பின்னடைவாகும். அதே சமயத்தில் இவ்வளவு திறமையான வேகப்பந்துவீச்சாளர் இல்லாதது இந்திய அணிக்கு சாதகமான விஷயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது!

இதுகுறித்து நியூசிலாந்து பயிற்சியாளர் கூறும் பொழுது “முக்கியமான ஒரு கட்டத்தில் நாங்கள் நிற்கும் பொழுது அவர் போன்ற ஒருவர் இல்லாதது பெரிய பின்னடைவை தருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவர் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இருந்து வந்தார். அவர் அந்த அளவிற்கு தரமான பந்துவீச்சாளர். அவர் சிறந்த அணி வீரர். அவருடைய ஆளுமையையும் தரத்தையும் நாங்கள் இழக்கப் போகிறோம் என்பது வருத்தமாக இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!