பவுலிங்கில் ஆஸியை அலறவிட்ட கிளன் பிலிப்ஸ்..16 ஆண்டுகளுக்கு பிறகு மெகா சாதனை

0
864
Phillips

நியூசிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்பொழுது நியூசிலாந்தில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் விழுந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி கேமரூன் கிரீன் அதிரடி சதத்தால் முதல் இன்னிங்சில் 383 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

இதற்கடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 179 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக தெரிந்து கொண்டிருந்த ஆடுகளும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறிப் போனது போல தெரிந்தது.

ஆஸ்திரேலியா அணி பெரிய முன்னிலை பெற்று தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி நேற்று ஸ்மித் மற்றும் லபுசேன் விக்கெட்டை 13 ரன்களுக்கு இழந்திருந்தது. இந்த இரண்டு விக்கெட்டையும் டிம் சவுதி கைப்பற்றி இருந்தால்.

இன்று மூன்றாவது நாள் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மேலும் 151 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆஸ்திரேலியா அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு நேற்று நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயன் மட்டுமே தாக்குப் பிடித்து 41 ரன்கள் எடுத்தார். அடுத்து கேமரூன் கிரீன் 34, டிராவிஸ் ஹெட் 29, உஸ்மான் கவாஜா 28 என ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

நியூசிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக பந்து வீசிய பகுதி நேர பந்துவீச்சாளர் கிளன் பிலிப்ஸ் 16 ஓவர்கள் பந்து வீசி, 4 மெய்டன்கள் செய்து, 45 ரன்கள் தந்து 5 விக்கெட் கைப்பற்றினார்.

ஒரு நியூசிலாந்து சுழல் பந்துவீச்சாளர் கடைசியாக நியூசிலாந்தில் வைத்து ஐந்து விக்கெட் கைப்பற்றிய சம்பவம் 16 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. 2006 ஆம் ஆண்டு பெஸ்ட் அணிக்கு எதிராக நியூசிலாந்தின் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் டேனியல் வெட்டேரி ஆறு விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

பிறகு 16 ஆண்டுகள் கழித்து தற்பொழுது தான் நியூசிலாந்தில் ஒரு நியூசிலாந்து சுழல் பந்துவீச்சாளர் ஐந்து விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். 369 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி 66 ரன்களுக்கு மூன்று விக்கெட் இழந்து தோல்வியை தவிர்க்க போராடிக் கொண்டிருக்கிறது.