உலக கிரிக்கெட்

330 ரன்.. முன்னாள் சிஎஸ்கே வீரர்கள் அசத்தல்.. பாபர் அசாம் ஏமாற்றம்.. 78 ரன்னில் நியூசி அணி வெற்றி.. முத்தரப்பு தொடர்

பாகிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி விளையாடின.

- Advertisement -

இதில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முத்தரப்புத் தொடர்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் விதமாக மூன்று அணிகள் பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் லாகூரில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர் வில் யங் 4 ரன்னில் வெளியேறினாலும், சிஎஸ்கே வீரரான ரச்சின் ரவிந்த்ரா வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்தார். இதில் ரவீந்திரா 25 ரன்னில் வெளியேற வில்லியம்சன் மற்றும் முன்னாள் சிஎஸ்கே வீரர் டாரி மிச்சல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

95 ரன்கள் இணைந்து குவித்த இந்த ஜோடியில் வில்லியம்சன் 58 ரன்னில் வெளியேறினார். அதற்குப் பின்னர் மிச்சல் 81 ரன்னில் ஆட்டம் இழக்க, ஆல் ரவுண்டர் வரிசையில் அபாரமாக விளையாடிய கிலென் பிலிப்ஸ் 74 பந்துகளை எதிர் கொண்டு 6 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 106 ரன்கள் குவித்தார். இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் சாகின் அப்ரிடி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

நியூசிலாந்து அணி சிறப்பான வெற்றி

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் பாபர் அசாம் 10 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பகார் ஜமான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மூன்றாவது வரிசை வீரர் கம்ரான் குலாம் 18 ரன் மற்றும் கேப்டன் ரிஸ்வான் 3 ரன்னில் ஏமாற்றம் அளிக்க, சல்மான் அகா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 51 பந்துகள் விளையாடிய நிலையில் 40 ரன்னில் ஆட்டம் இழந்து சல்மான் வெளியேற, அவரைத் தொடர்ந்து தையப் தாஹிர் 30 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க:பிரம்மிச்சு போயிட்டாரு.. 18 வயது பையனா இப்படி.? பேட்டிங்கை பார்த்து திகைத்த ரவி சாஸ்திரி – முன்னாள் பேட்டிங் கோச்

அதற்குப் பிறகு களம் இறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, தொடக்க வீரர் ஃபகார் ஜமான் 69 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸ் என 84 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி இறுதியாக 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் மட்டுமே குவித்து 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணியை பொறுத்தவரை மாட் ஹென்றி 3 விக்கெட் மற்றும் முன்னாள் சிஎஸ்கே வீரர் சாண்ட்னர் 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -
Published by