பிரம்மிச்சு போயிட்டாரு.. 18 வயது பையனா இப்படி.? பேட்டிங்கை பார்த்து திகைத்த ரவி சாஸ்திரி – முன்னாள் பேட்டிங் கோச்

0
1783

இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் முன்னாள் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியை திகைக்க வைத்த இளம் வீரர் குறித்து சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

த்ரோ டவுன் பயிற்சி அமர்வு

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் இந்திய அணியில் வாய்ப்பு பெற்று விளையாடுவது சமீப காலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் அத்தகைய வீரர்கள் உடனடியாக இந்திய அணியில் விளையாட தேர்வு செய்யப்பட மாட்டார்கள். அதற்கு இடையே த்ரோ டவுன் எனப்படும் வேகப்பந்து நிபுணர்களுக்கு எதிராக இந்திய அணியில் வாய்ப்பு பெரும் வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். அப்படி அவர்களின் ஒப்புதல் பெற்றால் மட்டுமே இந்திய பிளேயிங் லெவனில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படும்.

இந்த சூழ்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்த சுப்மான் கில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் வாய்ப்பு கிடைத்தது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் 9 மற்றும் 7 ரன்னில் வெளியேறி இருந்தாலும் நெட்சில் வேகப்பந்து நிபுணர்களுக்கு எதிராக சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்போது அவருக்கு வெறும் 18 வயது மட்டுமே ஆன நிலையில் அவரது திறமையை கண்டு அப்போது பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி திகைத்துப் போனதாக இந்திய முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ரவி சாஸ்திரி திகைத்த வீரர்

இது குறித்து சஞ்சய் பாங்கர் விரிவாக கூறும்போது “இந்தியாவுக்கான தனது முதல் நெட் ஷெஷனின்போது சுப்மாமன் கில் மீது முதல் பார்வை இருந்தது. இந்தியாவில் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அதாவது இந்திய அணிக்காக விளையாடும் முன்னர் பயிற்சி அமர்வில் த்ரோ டவுன் வேகப்பந்து நிபுணர்களுக்கு எதிராக வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். அந்த பயிற்சி அமர்வில் கில் மிகச் சிறப்பாகவே செயல்பட்டார்.

இதையும் படிங்க:சோலி முடிஞ்ச்.. மீண்டும் டெஸ்ட் கேப்டன் ஆகிறாரா விராட் கோலி.? கம்பீர் எடுத்த முக்கிய முடிவு.. வெளியான தகவல்

அது அவரது ஸ்கிரீன் டெஸ்ட் ஆக இருந்தது. அப்போது பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி அவரது பேட்டிங்கை பார்த்து திகைத்துப் போய் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயாராக இருக்கும் ஒரு வீரர் எங்களிடம் இருக்கிறார் என்று கூறினார். அந்த அளவிற்கு அவரது பேட்டிங் சிறப்பாக இருந்தது” என்று சஞ்சய் பாங்கர் கூறியிருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது கில் 87 ரன்கள் குவித்த இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -