நியூசி முதல் டி20.. உலகக்கோப்பை அணியை இறக்கிய கம்பீர்.. சவால் விட்ட சூரியகுமார் – இந்திய அணி வெல்லுமா?

0
10
Surya

இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது.

தற்போது இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாக்பூர் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்திய அணி ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணியிடம் இழந்திருப்பதால் டி20 தொடரை வெல்வதற்கு முனைப்பு காட்டி வருகிறது.

- Advertisement -

கம்பீர் இறக்கிய அணி

அடுத்து டி20 உலகக் கோப்பை நடைபெற இருக்கின்ற காரணத்தினால் தலைமை பயிற்சியாளர் கம்பீர் முழு பலம் வாய்ந்த இந்திய அணியை களம் இறக்கி இருக்கிறார். மொத்தம் எட்டு வரையில் பேட்டிங் மற்றும் 6 பந்துவீச்சு விருப்பங்கள் என இந்திய அணி வலிமையானதாக காணப்படுகிறது.

இன்று களம் இறங்க உள்ள இந்திய பிளேயிங் லெவனில் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இசான் கிஷான், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்ச்சர் படேல் வருண் சக்கரவர்த்தி, அர்ஸ்தீப் சிங் மற்றும் பும்ரா.

- Advertisement -

சூரியகுமார் சவால்

இந்திய அணி டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்ய இருக்கும் நிலையில் சூரியகுமார் யாதவ் பனிப்பொழிவு இரண்டாம் பகுதியில் இருக்கும் என்று கூறியிருக்கிறார். அதே சமயத்தில் தாங்கள் முதலில் பேட்டிங் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை தங்களால் பனிப்பொழிவை தாண்டி செல்ல முடியும் என சவால் விட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க : சூரியகுமார் பிளேயிங் லெவன் முடிவுக்கு உத்தப்பா எதிர்ப்பு.. இந்த வீரரைதான் ஆடணும் – என்ன நடந்தது?

சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது “நாங்கள் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது 8:30 மணி அளவில் பனிப்பொழிவு வந்தது. எனவே நாங்கள் முதலில் பந்து வீசவே விரும்பினோம். ஆனால் நாங்கள் இதை ஒரு பெரிய விஷயமாக பொருட்படுத்தவில்லை. நாங்கள் முதலில் பேட்டிங் செய்த பொழுது மிகச் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறோம் எனவே எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று கூறி இருக்கிறேன்.

- Advertisement -