இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முடிவு செய்திருக்கும் பிளேயிங் லெவன் குறித்து ராபின் உத்தப்பா மாற்றுக் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த நடைபெற இருக்கின்ற காரணத்தினால் இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் முக்கியமானதாக அமைகிறது.
சூரியகுமார் பேச்சு
மேலும் ஏற்கனவே நியூசிலாந்து தொடருக்கு அறிவிக்கப்பட்ட டி20 அணியில் திலக் வர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் காயமடைந்த காரணத்தினால் வெளியேறி இருக்கிறார்கள். இந்த நிலையில் இவர்களுடைய இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவி பிஸ்னாய் இருவரும் தற்காலிக பெயர்களாக அறிவிக்கப்பட்ட இருக்கிறார்கள். மேலும் இவர்கள் முதல் மூன்று டி20 போட்டிக்கான இந்திய அணியில் மட்டுமே இடம் பெற்று இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கேப்டன் சூரியகுமார் யாதவ் மூன்றாவது இடத்தில் இஷான் கிஷானை விளையாட வைப்பதாக நேற்று கூறியிருந்தார். ஏனென்றால் அவர் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார். மேலும் அவர் சில ஆண்டாக இந்திய அணிக்கு விளையாடாமல் இருந்து வருகிறார். எனவே அவருக்கு பயிற்சி தேவை என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறி இருந்தார்.
ராபின் உத்தப்பா மாற்றுக் கருத்து
இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் இப்படி கூறியிருக்கும் நிலையில் இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா இதற்கு எதிர்மறையான கருத்தை முன் வைத்திருக்கிறார். மாற்று வீரராக யாரைத் தேர்வு செய்தார்களோ அவரைத்தான் விளையாட வைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : சின்ன டீம் கிடைக்கும் சூரியகுமார் விடாதீங்க.. ஆனா நான் சொல்ற மாதிரி ஆடுங்க – இர்ஃபான் பதான் அறிவுரை
இதுகுறித்து ராபின் உத்தப்பா கூறும் பொழுது ” தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டி20 அணிக்குள் வந்திருக்கிறார். எனவே நான் அவரை மூன்றாவது இடத்தில் விளையாட பார்க்கிறேன். இது அவர் அணிக்குள் வந்திருக்கும் நேரம். எனவே அவருக்கு முதலில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். மேலும் நான்காம் இடம் முதல் ஆறாவது இடம் வரையில் சூரியகுமார் யாதவ், சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா விளையாடுவதையும் விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






