இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மீண்டும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றி இருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு இந்த தொடர் மிகவும் மோசமானதாக அமைந்திருக்கிறது.
தற்போது பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை நான்குக்கு ஒன்று என முதலில் இழந்தது. இதற்கு அடுத்து சீனியர் வீரர்களைக் கொண்ட பாகிஸ்தான் ஒருநாள் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை மொத்தமாக இழந்து மோசமான விமர்சனங்களை சந்திக்கிறது.
மழையால் குறைந்த ஓவர்கள்
இன்று மழையின் காரணமாக போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ரிஸ் மரியூ 61 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஹென்றி நிக்கோலஸ் 31 ரன்கள், டேரில் மிட்சல் 43 ரன்கள், மைக்கேல் பிரேஸ்வெல் 40 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார்கள்.
இதைத் தொடர்ந்து 42 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் சிறப்பாக பந்து வீசிய அகித் ஜாவேத் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த நியூசிலாந்து அணியில் முன்னணி வீரர்கள் பலர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதை நியூசிலாந்து சி டீம் என்று சொல்லலாம்.
மீண்டும் பாகிஸ்தான் தோல்வி
இதை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து பாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் ஓரளவுக்கு தாக்குபிடித்து விளையாடி 58 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க : ரசிகர்களுக்கு தெரிஞ்சது தோனிக்கு தெரியாதா?.. அத செஞ்சிங்கனா சிஎஸ்கே அழிஞ்சிடும் – ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை
இதற்கடுத்து கேப்டன் முகமது ரிஸ்வான் 32 பந்துகளில் 37 ரன்கள், தயாப் தாகீர் 31 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்கள். இறுதியாக பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 221 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது. நியூசிலாந்து பந்து வீச்சில் பென் சியர்ஸ் ஐந்து விக்கெட் கைப்பற்றி அசத்தினால்.