வெறும் 50 ரன்.. இலங்கை அணிக்கு நியூசிலாந்து பதிலடி.. லாதம் வில்லியம்சன் சென்சிபிள் இன்னிங்ஸ்.. முதல் டெஸ்ட்

0
42
NZ

நியூசிலாந்து அணி இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் திருப்பி பதிலடி கொடுத்திருக்கிறது. இன்று இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் மழையால் பாதிக்கப்பட்ட போட்டியில் 50 ரன்கள் மட்டுமே முதல் இன்னிங்சில் இலங்கை அணியை விட நியூசிலாந்து அணி பின்தங்கி இருக்கிறது.

தற்போது நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த தொடரை வெல்வதின் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் இந்திய அணியை நெருக்கடிக்கு உள்ளாக்க முடியும். எனவே நியூசிலாந்து அணிக்கு இது மிகவும் முக்கியமான தொடராக இருக்கிறது.

- Advertisement -

கமிந்து மெண்டிசின் ரன் மழை

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு கமிந்து மெண்டிஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 112 ரன்கள் எடுத்தார். இவருடன் இணைந்து விளையாடிய குசால் மெண்டிஸ் 50 ரன்கள் எடுத்தார். நேற்று முதல் நாள் முடிவில் இலங்கை அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று மேற்கொண்டு இரண்டாவது நாளில் இலங்கை அணி 305 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் வேகப் பந்துவீச்சாளர் வில்லியம் ஓரூர்க் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். சுழல் பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

டாம் லாதம் – கேன் வில்லியம்சன் அரை சதங்கள்

தனது முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் டெவோன் கான்வே 17, டாம் லாதம் 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து வந்த நட்சத்திர ஆட்டக்கார ஸகேன் வில்லியம்சன் சரியாக அரை சதம் எடுத்து 50 ரன்களில் வெளியேறினார். நான்காவது இடத்தில் வந்த ரச்சின் ரவீந்தரா 39 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் ஃபார்முலாதான் சரி.. ஜடேஜா அந்த விஷயத்தை சொல்லி ஹெல்ப் பண்ணினார் – சதம் அடித்த அஸ்வின் பேட்டி

இன்று இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 72 ஓவர்களில் 4 விக்கெட் 355 ரன்கள் எடுத்திருக்கிறது. டேரில் மிட்சல் 41, டாம் ப்ளூன்டல் 18 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள். தற்போது இலங்கை அணியை விட முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் மட்டுமே பின் தங்கி இருக்கிறது. இந்த போட்டியை நியூசிலாந்து வெல்லும் பட்சத்தில் அதை இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பில் கொஞ்சம் நெருக்கடியை உண்டாக்கும்.

- Advertisement -