இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி 88 ரன்களில் சுருண்டு 514 ரன்கள் பின்தங்கி இருக்கிறது.
தற்போது நியூசிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நியூசிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை இமாலய ரன் குவிப்பு
இந்தப் போட்டியிலும் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணி கவிந்து மெண்டிஸ் 184, தினேஷ் சண்டிமால் 116 குசால் மெண்டிஸ் 106 ரன்கள் என மூவரும் சதம் அடித்தார்கள். இதைத்தொடர்ந்து இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 602 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளர் செய்து கொள்ளப்பட்டது.
நேற்று போட்டியின் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸ் ஆரம்பித்த நியூசிலாந்து அணி 22 ரன்கள் எடுத்திருந்தபொழுது டாம் லாதம் மற்றும் டெவோன் கான்வே விக்கெட்டுகளை இழந்திருந்தது. இலங்கை அணி விளையாடும் பொழுது சாதாரணமாக தெரிந்த ஆடுகளம் நியூசிலாந்து விளையாடும் பொழுது பந்து வீச்சுக்கு சாதகமாக தெரிந்தது.
பரிதாபமாக சுருண்ட நியூசிலாந்து
இன்று தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி மேற்கொண்டு 66 ரன்கள் மட்டுமே எடுத்து மீதமிருந்த எட்டு விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 514 ரன்கள் பிரம்மாண்ட முன்னிலை பெற்று இருக்கிறது.
இதையும் படிங்க: ஆகாஷ் தீப்பை 3வது பவுலரா நான் ஏத்துக்க மாட்டேன்.. அவருக்கு பிளைட்ல இந்த இடம்தான் – தினேஷ் கார்த்திக் பேச்சு
இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூர்யா ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மேலும் இந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி அடைவது 99 சதவீதம் உறுதியாகிவிட்டது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டிக்கான வாய்ப்புகள் அந்த அணிக்கு குறைகிறது. அதே சமயத்தில் இலங்கை அணி முன்னேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.