இந்திய அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற 107 ரன்கள் தேவைதான் என்றாலும் அது சுலபமான விஷயம் கிடையாது என நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் வில்லியம் ஓ’ரூர்க் கூறியிருக்கிறார்.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணியின் கைவசம் பத்து விக்கெட் இருக்க, நாளை கடைசி நாளில் அந்த அணி 107 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் என்ற நிலை இருக்கிறது.
நாளை போட்டியின் கடைசி நாளில் மதியம் ஒரு மணி முதல் இரவு வரை பெங்களூர் சின்னசாமி மைதானத்தைச் சுற்றிலும் மழை வரும் என்று வானிலை அறிக்கை கூறுகிறது. அதே சமயத்தில் ஒரு மணிக்கு முன்பாகவும் வானம் மேகமூட்டத்துடன்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
வானம் மேகமூட்டமாக இருந்தால் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் போட்டிக்குள் உடனடியாக புதிய பந்தில் வருவார்கள். மதியத்திற்குள் 107 ரன்கள் அடிப்பது என்பதும் கடினமாகவும். மேலும் மதியத்திற்கு மேல் மழை வந்தால் போட்டி தொடர்ந்து நடைபெறவும் செய்யாது. எனவே தற்போது நியூசிலாந்து அணியின் வெற்றி உறுதி என்று சொல்ல முடியாத சூழ்நிலையே நிலவுகிறது.
இதுகுறித்து நியூசிலாந்து வீரர் வில்லியம் ஓ’ரூர்க் கூறும் பொழுது “இங்கிருந்து எங்களுடைய வெற்றி எளிதானது என்று நான் சொல்ல மாட்டேன். எங்களுக்கு எதிரே உலகத்தரம் வாய்ந்த அணி இருக்கிறது. நாளை நாங்கள் வெளியே சென்று விளையாடுவதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்”
இதையும் படிங்க : ரிஷப் பண்ட் கிட்ட பேசி வச்சது இதுதான்.. நாங்க இத செஞ்சா நியூசிலாந்து ஜெயிக்க முடியாது – சர்பராஸ் கான் பேட்டி
“மேலும் எங்களுக்காக மழை பெய்யாமல் இருக்கும் பொழுது நாங்கள் இந்த போட்டிக்குள் சென்று வெற்றி பெறவும் முடியும். விராட் கோலி போன்ற எங்களின் விளையாட்டில் சிறந்த ஒருவரின் விக்கெட்டை கைப்பற்றுவது எப்பொழுதும் பெருமையான ஒன்று. இப்படியான வீரர்களை பார்த்து தான் நாங்கள் வளர்ந்து வந்தோம்” என்று கூறியிருக்கிறார்.