ரிஷப் பண்ட் கிட்ட பேசி வச்சது இதுதான்.. நாங்க இத செஞ்சா நியூசிலாந்து ஜெயிக்க முடியாது – சர்பராஸ் கான் பேட்டி

0
303
Sarfaraz

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் உடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்ததை பற்றி சர்பராஸ் கான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் முதல் டெஸ்ட் போட்டி நான்கு நாள் முடிவில் மழையின் பெரும் பாதிப்புக்கு இடையில் சுவாரசியமான கட்டத்தை எட்டி இருக்கிறது. நாளை ஐந்தாவது நாளில் நியூசிலாந்து அணியின் கையில் 10 விக்கெட் இருக்க, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும்.

- Advertisement -

சர்பராஸ் கான் – ரிஷப் பண்ட் கூட்டணி

இந்திய அணி மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் மூன்று விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து 126 ரன்கள் பின்தங்கி இருந்தது. இந்த நிலையில் இன்று முட்டி வலியால் பாதிக்கப்பட்டிருந்த ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய உள்ளே வந்து சர்ப்ராஸ் கான் உடன் இணைந்தார்.

இந்த ஜோடியில் இன்று சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 150 ரன்கள் எடுத்தார். அவருடன் இணைந்து சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் துரதிஷ்டவசமாக சதம் அடிக்க முடியாமல் 99 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 211 பந்துகளில் 177 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

- Advertisement -

நான்தான் அழைத்தேன்

இருவருக்கும் இடையில் ரன் ஓடுவதில் ஏற்பட்ட குழப்பம் குறித்து பேசிய சர்பராஸ் கான் கூறும் பொழுது ” ரிஷப் பண்ட் காலில் அடிபட்டு இருக்கின்ற காரணத்தினால் மெதுவாக ஓடி ரன்கள் எடுக்கலாம் என்று நாங்கள் ஏற்கனவே பேசி வைத்திருந்தோம். குறிப்பிட்ட அந்த ரன் ஓடும் பொழுது இரண்டு ரன் எடுக்கலாம் என்று நான்தான் முதலில் கூறினேன். பிறகு தான் எனக்கு அவருடைய முட்டி வலி பற்றி ஞாபகம் வந்தது. அதனால்தான் நான் தடுத்து நிறுத்தினேன். நல்லவேளை அவர் அவுட்டில் இருந்து தப்பித்து விட்டார்”

இதையும் படிங்க : 674/6.. இந்திய அணி விட்டதை செய்த தமிழக அணி.. வாஷிங்டன் சுந்தர் ரஞ்சன் பால் அதிரடி.. ரஞ்சி டிராபி 2024

“நாங்கள் இருவரும் சுதந்திரமாக விளையாட வேண்டும் என்று முடிவு செய்தோம். ரிஷப் பண்ட் அவருடைய வழியில் விளையாடினால் என்ன செய்வார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எனவே நான் அவருக்கு சிங்கிள் கொடுக்க விரும்பினேன். இந்த விக்கெட்டில் ரன் எடுப்பது எளிதானது கிடையாது. பந்து திரும்பிக் கொண்டிருக்கிறது. நாங்கள் உள்ளே வந்து இரண்டு மூன்று விக்கெட்டுகளை ஆரம்பத்தில் எடுத்தால் நியூசிலாந்து அணிக்கு அழுத்தம் ஏற்படுத்தி வெல்ல முடியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -