நியூசிலாந்து பாகிஸ்தான்; டெவோன் கான்வே புதிய சாதனை!

0
3029
Pak vs Nz

சமீபத்தில் பென ஸ்டோக்ஸ் தலைமையில் பாகிஸ்தான் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்திருந்த இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கு பெற்று மூன்றையும் வென்று பெரிய வெற்றியுடன் நாடு திரும்பியது!

இதற்கு அடுத்து நியூசிலாந்த அணி இரண்டு டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது!

இதற்கடுத்து தொடரின் கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கராச்சி மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டியில் டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களான டெவோன் கான்வே மற்றும் டாம் லாதம் இருவரும் சிறப்பான அடித்தளத்தை நியூசிலாந்து அணிக்கு அமைத்துக் கொடுத்தார்கள். இருவரும் அரை சதத்தைக் கடந்து முதல் விக்கட்டுக்கு 134 ரண்கள் சேர்க்க, டாம் லாதம் 100 பந்துகளுக்கு 71 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து மிகச் சிறப்பாக விளையாடிய டெவோன் கான்வே இந்த வருடத்தின் முதல் சதத்தை அடித்தார். இறுதியில் 191 பந்துகளுக்கு 122 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்குப் பிறகு நியூசிலாந்து அணியின் நான்கு விக்கெட்டுகள் வெகு வேகமாக சரிந்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 36, நிக்கோலஸ் 26, டேரில் மிச்சல் 3, பிரேஸ்வெல் 0 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். தற்பொழுது நியூசிலாந்து அணி ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் சுழற் பந்துவீச்சாளர் ஆகா சல்மான் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இன்றைய நாளில் சதம் அடித்ததன் மூலம் டெவோன் கான்வே புதிய சாதனை ஒன்றை கிரிக்கெட் உலகில் படைத்திருக்கிறார். அது என்னவென்றால் ஆண்டின் துவக்கத்தில் சதம் அடிக்கும் முதல் வீரராக இரண்டு முறை தொடர்ந்து இடம் பெற்றிருக்கிறார். கடந்த வருடம் பங்களாதேஷ் அணிக்காக உள்நாட்டில் ஜனவரி மாதத்தில் நடைபெற்ற போட்டியில் சதத்தை அடித்திருந்தார். இந்த ஆண்டு தொடர்ந்து கிரிக்கெட் உலகில் இந்த ஆண்டு முதல் சதத்தை அடித்து புதிய சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்!