“நியூசிலாந்து பல தவறு செய்யும் டீம் கிடையாது.. ஜெயிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கு..!” – கிங் கோலி தந்த மாஸ் அட்வைஸ்!

0
1070
Virat

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மட்டும் என்று இல்லாமல் மற்ற இரண்டு கிரிக்கெட் வடிவங்களிலும் ஐசிசி தொடர்கள் என்று எடுத்துக்கொண்டால் இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கக்கூடிய அணி நியூசிலாந்து. வரலாறு அப்படியானதாகத்தான் இருக்கிறது. இந்திய அணிக்கு பெரிய பிரச்சனையை பல நீண்ட காலமாக நியூசிலாந்து அணி கொடுத்து வருகிறது.

2019 ஆம் ஆண்டு மிகச்சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியை பெற்றிருந்த இந்திய அணி, அந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றில் அபார வெற்றிகளைப் பெற்று முதல் அணியாக வந்தது. அப்படிப்பட்ட அணியை லீக் சுற்றில் தட்டுத் தடுமாறி அரை இறுதி வந்த நியூசிலாந்து வீழ்த்தியது.

- Advertisement -

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையிலும் லீக் சுற்றில் நியூசிலாந்து இந்தியாவை வீழ்த்தியது. முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தியது. இதுவரை 13 ஐசிசி தொடர்களில் நேருக்கு நேராக சந்தித்து பத்து முறை இந்திய அணியை வென்று இருக்கிறது.

இந்த நிலையில் இன்று நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட இருக்கிறது. மேலும் இரண்டு அணிகளும் இதுவரை தாங்கள் விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோற்காமல் இருக்கின்றன. இப்படியான காரணங்களினால் இந்த போட்டிக்கு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.

நியூசிலாந்து அணி குறித்து பேசி உள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கூறும் பொழுது “அவர்கள் மிகவும் தொழில்முறையான அணி மற்றும் கட்டமைக்கப்பட்ட அணி. அவர்கள் தங்கள் கிரிக்கெட்டை விளையாடுவதற்கு சிறந்த ஒழுக்கமான வழியை வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

வைத்திருக்கும் அந்த கட்டமைப்பிற்குள் அவர்கள் தொடர்ச்சியாக சீராக இருந்து விளையாடுகிறார்கள். அதுவே அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதற்கான பெருமை அவர்களுடைய அணிக்கே சேரும்.

எந்த அணியும் அவர்களுடன் விளையாடும்போது தங்களுடைய ரிதத்தை உடைத்துக் கொண்டு அவர்களின் திறமைக்கேற்ற வகையில் விளையாடுவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும். இது அவர்களின் நிலைத்தன்மையை நீங்கள் சமாளிக்க முடியுமா இல்லையா என்பதை முடிவு செய்யும்.

ஏனென்றால் அவர்கள் பல தவறுகளை செய்யக்கூடிய அணி கிடையாது. எனவே நீங்கள் அதிகப்படியான தவறுகள் செய்யாமல் இருந்து சர்வதேச தரத்தில் அவர்களுடன் விளையாடும் பொழுது அவர்களை வெல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும்!” என்று கூறியிருக்கிறார்!