சிஎஸ்கே பிளமிங்கை வைத்து நியூசிலாந்து போடும் திட்டம்.. 2024 ஐபிஎல் சீசனில் தொடர்வாரா?

0
215
CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு களத்திற்கு உள்ளே கேப்டன் மகேந்திர சிங் தோனி எப்படி மிக முக்கிய காரணமாக இருக்கிறாரோ, அதேபோல களத்திற்கு வெளியே தலைமை பயிற்சியாளர் நியூசிலாந்தை சேர்ந்த ஸ்டீபன் பிளமிங் இருக்கிறார்.

மகேந்திர சிங் தோனியின் திட்டங்கள் அனைத்தும் அவரது உள்ளுணர்வில் இருந்து வரக்கூடியது. அவர் பெரும்பாலும் புள்ளி விபரங்களை பார்த்து தனிப்பட்ட திட்டங்களை உருவாக்கக்கூடிய கேப்டன் கிடையாது. அந்தந்த சூழ்நிலைகளுக்கு சரியாக தமக்கு தோன்றக்கூடிய விஷயங்களை செயல்படுத்த கூடியவர்.

- Advertisement -

அதே சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் முழுக்க முழுக்க புள்ளி விபரங்களை சார்ந்து திட்டங்களை உருவாக்கக்கூடிய பயிற்சியாளர். மேலும் அவர் அணி கூட்டங்களில் வீரர்களிடம் மிகச் சிறப்பாக பேசக்கூடிய பேச்சாளர். இந்த விஷயங்களை எல்லாம் கடந்த வருடத்தில் பாப் டு பிளிசிஸ் தெளிவாக பேசி இருந்தார்.

இப்படி எதிரெதிர் துருவங்களான மகேந்திர சிங் தோனி மற்றும் ஸ்டீபன் பிளமிங் கூட்டணி இணைந்து இதுவரையில் ஐந்து ஐபிஎல் கோப்பைகளை 16 வருடங்களில் கைப்பற்றி இருக்கிறது. மேலும் மிக வெற்றிகரமான கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களாக இருவரும் ஐபிஎல் தொடரில் இருக்கிறார்கள்.

நியூசிலாந்து கிரிக்கெட் போடும் திட்டம்

இந்த நிலையில் நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்த முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இந்தியன்ஸ் என இரு நாடுகளில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு புதிய முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் வருகிறது. வழக்கம்போல் அரை இறுதிக்கு தகுதி பெற்று வெளியேறக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக நியூசிலாந்தின் தலைமை பயிற்சியாளராக கேரி ஸ்டெட் இருக்கும் பொழுது, துணை பயிற்சியாளராக பந்து வீச்சுக்கு நியூசிலாந்தின் முன்னால் வேகப்பந்துவீச்சாளர் ஷேன் பான்ட், மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் இருவரையும் சேர்க்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கு இவர்கள் இருவருமே சம்மதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கோலியுடன் என்னை கம்பேர் பண்ணாதிங்க.. கோப்பையை வென்ற பின் ஸ்மிருதி மந்தனா பேட்டி

ஸ்டீபன் பிளமிங் சிஎஸ்கே அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்க, ஷேன் பாண்ட் ராஜஸ்தான் ராயல் சாணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக இணைந்திருக்கிறார். இவர்களுக்கு ஐபிஎல் மற்றும் வெளிநாட்டு டி20 லீக்குகளில் நிறைய பொறுப்புகள் இருக்கிறது. தற்பொழுது பாகிஸ்தான் அணிக்கு ஐபிஎல் காலத்தில் நியூசிலாந்து அணி டி20 தொடர் விளையாட சுற்றுப்பயணம் செய்கிறது. இவர்கள் இருவரும் ஐபிஎல் முடிந்து நியூசிலாந்து அணியுடன் பயணிப்பார்களா? இல்லை நடுவில் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? என்பது உறுதியாகவில்லை. பெரும்பாலும் ஐபிஎல் தொடர் முடிந்து நியூசிலாந்து உலகக் கோப்பை அணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.