நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு கிடைத்த முதல் வெற்றி இது. இந்த வெற்றி குறித்து நியூசிலாந்து கேப்டன் மிச்சல் சான்ட்னர் பேசியிருக்கிறார்.
இந்திய அணி முதல் மூன்று போட்டிகளை வென்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இருந்தாலும் நியூசிலாந்து அணி டி20 உலக கோப்பை தொடரக்குள் செல்வதற்கு நம்பிக்கை அளிக்க ஒரு வெற்றி அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. நேற்று அந்த வெற்றியின் நியூசிலாந்துக்கு கிடைத்திருக்கிறது.
இதுகுறித்து மிட்சல் சான்ட்னர் பேசும் பொழுது ” இந்த வெற்றி நல்லா அனுபவமாக இருந்தது. மேலும் எங்களுக்கு எதிராக இந்தியா பேட்டிங்கில் எப்படி ஆரம்பித்ததோ நேற்று நாங்களும் அப்படியே ஆரம்பித்தோம். ஆனால் இந்திய அணிக்கு எதிராக 200 ரன்கள் கூட பாதுகாப்பானது இல்லை என்பது எங்களுக்கு தெரியும். எனவே நாங்கள் அப்படியே சுருங்கி விடக்கூடாது தொடர்ந்து அதிரடியாக விளையாட வேண்டும் என்று முடிவு செய்தோம்”
“அதே சமயத்தில் எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தாலும் மிடில் ஓவர்களில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்து பெரிய ஸ்கோராக மாற்ற தவறிவிடுகிறோம். ஆனால் நேற்றைய போட்டியில் டேரில் மற்றும் ஃபோல்க்ஸ் இருவரும் கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடி பெரிய ஸ்கோர்க்கு அணியை கொண்டு சென்றார்கள்”
“டி20 உலக கோப்பைக்கான தயாரிப்புக்கு இந்தியாவில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதை விட வேறு சிறந்த பயிற்சி எதுவுமே இருக்க முடியாது. அடுத்த போட்டிக்கு எங்களுடைய சில முக்கிய வீரர்கள் திரும்பி வருகிறார்கள். ஆனால் நாம் எப்பொழுதும் தெளிவாக இருக்க வேண்டும். வீரர்களுக்கு என்ன பொறுப்பு என்பதை நாம் சரியாக கூற வேண்டும்”
இதையும் படிங்க : அவருக்கு பண்ணுற அநியாயம் மாதிரி.. அபிஷேக் சர்மாவிற்கு இப்போது செய்ய முடியுமா.? ஏன் இந்த பாகுபாடு – ஆகாஷ் சோப்ரா கேள்வி
” நேற்று ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகம் இல்லாததாக தட்டையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு பந்து சீமில் இருந்து கூட திரும்பியது. பந்தை மெதுவாக வீசும் பொழுது திருப்பம் கிடைத்தது. ஆரம்பத்தில் விக்கெட் வீழ்த்துவது மத்திய ஓவர்களில் ஸ்பின்னர்கள் எங்களுக்கு உதவியாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.