அவருக்கு பண்ணுற அநியாயம் மாதிரி.. அபிஷேக் சர்மாவிற்கு இப்போது செய்ய முடியுமா.? ஏன் இந்த பாகுபாடு – ஆகாஷ் சோப்ரா கேள்வி

0
65

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு விளையாடிய இந்திய அணி நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 165 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக மிடில் வரிசை பேட்ஸ்மேன் சிவம் துபே 23 பந்துகளை எதிர் கொண்டு 65 ரன்கள் குவித்தார்.

இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருந்தாலும் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணித் தேர்வு சில குழப்பங்களை ஏற்படுத்தி இருப்பதாக ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டு பேசியிருக்கிறார். இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி, மூன்றாவது போட்டி முதல் ஏன் விளையாடவில்லை என்று தனது சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “வருண் சக்கரவர்த்தி விளையாடாதது சரியான முடிவு கிடையாது. என் கருத்துப்படி அவர் நிச்சயமாக விளையாடி இருக்க வேண்டும். அவர் ஒரே ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடுகிறார் என்பதை நாம் விரைவாக மறந்து விடுகிறோம். குறிப்பிட்டுப் பார்த்தால் பேட்ஸ்மேன்களுக்கு இது போன்ற ஓய்வுகள் கொடுக்கவில்லை. இதேபோன்று அபிஷேக் ஷர்மாவிற்கு ஓய்வு கொடுத்து அவரது இடத்தில் வேறு யாரையாவது விளையாட வைப்பீர்களா?

அவர் முதல் தேர்வு வீரர், மேலும் அவர் இப்போது மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். எனவே நாம் பேட்ஸ்மேன்களுக்கு இது போன்று செய்வதில்லை. பிறகு ஏன் நாம் பந்துவீச்சாளர்களை உட்கார வைக்கிறோம். சுழற் பந்துவீச்சாளர்களுக்கு என்ன மாதிரியான பணிச்சுமை மேலாண்மை தேவை? என்று எனக்கு தெரியவில்லை” என்று அவர் பேசி இருக்கிறார். டி20 உலக கோப்பை தொடரானது மிக அருகில் இருக்கும் நிலையில் இது போன்ற ஓய்வுகள் அவசியமற்றது என்று ஆகாஷ் சோப்ரா கருதுகிறார்.

- Advertisement -