இந்திய கிரிக்கெட் அணி நாளை நியூஸிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் இந்திய அணி குறித்து சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி சேம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதன் லீக் சுற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி அதற்குப் பிறகு மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய போது இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி அறிமுகமானார்.
முதல் போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அரை இறுதி ஆட்டத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியிலும் தனது சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இந்த சூழ்நிலையில் சுழற்சிக்கு சாதகமான ஆடுகளத்தில் சக்கரவர்த்தி சிறப்பாக செயல்பட்டு வருவதால் நியூசிலாந்து அணியின் கேப்டன் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார். அதாவது கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை அவரை எதிர்கொள்ள நியூஸிலாந்து வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “கொஞ்சம் மர்மம் இருந்தாலும் சில வீரர்கள் அவரை எதிர்கொள்வது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். ஆனால் அவர்கள் மறுநாளில் இருந்து நிறைய கற்றுக் கொள்வார்கள் என்று தோன்றுகிறது. ஆடுகளம் இதே போல இருந்தால் அவர் மற்ற மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் சேர்ந்து விளையாடும் போது மிகவும் சவாலாக இருக்கும். எங்கள் வீரர்கள் நாளை தயாராக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க:ஒரே டீம்ல 2 பேர் மாத்தி பேசுனதால.. மற்றவர்களை இந்திய அணிக்கு சாதகம் என்று நினைக்க வைத்தது – ஆஸி பிராட் ஹாக்
இன்னும் கொஞ்சம் தெளிவாக பார்ப்போம், அவரது அச்சுறுத்தல்கள் என்னவென்று தற்போது நமக்கு தெளிவாக தெரியும் என்று நினைக்கிறேன். 115 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் வீசக்கூடிய ஆர்ம் வகை பவுலிங் , அதுதான் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் வருண் சக்கரவர்த்தி பெரிய சவாலாக இருப்பார் என்று தோன்றுகிறது” என பேசி இருக்கிறார். நாளை வெற்றி பெறும் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றுவதால் இந்த இரண்டு அணிகளுக்கிடையே மிகப்பெரிய போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாளை எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.