கடைசி ஓவர் 15 ரன்.. திரில் போட்டியில் நியூசி பைனலுக்கு தகுதி.. வெஸ்ட் இண்டீஸ் வெளியேறியது.. மகளிர் டி20 உலக கோப்பை

0
236
New Zealand

தற்போது நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதியில் பரபரப்பான போட்டியில் எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

- Advertisement -

சிறப்பாக கட்டுப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ்

முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு துவக்க வீராங்கனைகள் சூசி பேட்ஸ் 28 பந்தில் 26 ரன்கள், ஜார்ஜியா பிம்பர் 31 பந்தில் 33 ரன்கள் எடுத்தார்கள். இதற்கு அடுத்து விக்கெட் கீப்பர் இசபெல்லா கேஸ் 14 பந்தில் 20 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் மிகச்சிறப்பான பந்துவீச்சில் நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்தியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சில் டோட்டின் நான்கு ஓவர்கள் பந்துவீசி 22 ரன்கள் கொடுத்து நான்கு வைக்க கைப்பற்றினார்.

- Advertisement -

கடைசி ஓவருக்கு 15 ரன்கள்

குறைந்த இலக்கை நோக்கி களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அந்த அணியின் நட்சத்திர வீராங்கனைகள் ஹைலி மேத்யூஸ் 21 பந்தில் 15 ரன்கள், கியானா ஜோசப் 12 பந்தில் 12 ரன்கள் எடுத்து பவர் பிளேவிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட டோட்டின் தாக்குப்பிடித்து விளையாடி 23 பந்தில் 33 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணி கடைசி ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து ஆறு ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையும் படிங்க : WTC தொடர்.. பாக் அணியின் வெற்றி.. சரிந்த இங்கிலாந்து.. புள்ளி பட்டியலில் மாற்றம்.. இந்தியாவின் நிலை என்ன?.. முழு விபரம்

இது தொடர்ந்து நியூசிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சில் ஈடன் கார்ஸன் 3, அமலியா கெர் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். மேலும் ஞாயிறன்று நடக்க இருக்கும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. மேலும் இந்த இரண்டு அணிகளும் இதுவரையில் டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -