இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் பாகிஸ்தானில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருக்கிறது.
பாகிஸ்தான் அணி பெற்ற வெற்றி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளன.
பாகிஸ்தானின் சிறப்பான வெற்றி
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் அதற்கு அடுத்ததாக நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முன்னணி மூன்று வீரர்களை பாகிஸ்தான் அணி வெளியேற்றிய பிறகு சிறப்பாக செயல்பட்டது.
இந்த சூழ்நிலையில் 152 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தற்போது தொடரை 1-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணி 16.67 புள்ளிகள் சதவீதத்தில் ஒன்பதாவது இடத்தில் இருந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் மாற்றம்
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் சதவீதம் இரண்டாவது டெஸ்ட் வெற்றிக்கு பிறகு 25.92 ஆக உயர்த்தப்பட்டு ஒன்பதாவது இடத்தில் இருந்து தற்போது எட்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டியில் வெற்றியும் ஆறு போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது. இந்த சூழ்நிலையில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் இங்கிலாந்து அணி அதன் புள்ளிகள் சதவீதத்தை இழந்திருக்கிறது.
இதையும் படிங்க:அவர் உள்ள வரும்போது.. கேஎல் ராகுல் இதை செஞ்சே ஆகணும்.. இல்லனா மாட்டிக்குவாரு – மனோஜ் திவாரி கருத்து
18 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் 45.59 சதவீதத்தில் இருந்த இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட் தோல்விக்கு பிறகு 43.06க்கு சரிந்திருக்கிறது. 8வது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானின் வெற்றியால் தற்போது கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதில் இந்திய அணி 11 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றியும் மூன்று போட்டிகளில் தோல்வியும் தழுவி தற்போது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது






