NZvsSA.. 2வது பெரிய வரலாற்று வெற்றி.. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது நியூசிலாந்து

0
106
Williamson

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு அனுபவம் இல்லாத தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் தோற்று பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணிக்கு முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் 118 ரன்கள் எடுக்க, இளம் வீரர் ரச்சின் ரவீந்திர 240 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 511 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் கேப்டன் நீல் பிராண்ட் ஆறு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 162 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. நியூசிலாந்து ஜெமிஷன் மற்றும் சான்ட்னர் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணிக்கு மீண்டும் கேன் வில்லியம்சன் சதம் அடித்து 109 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி 179 ரன்களுக்கு நான்கு விக்கெட் இழப்புக்கு டிக்ளேர் செய்தது.

தென் ஆப்பிரிக்க அணி 529 என்கின்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடியது. அந்த அணிக்கு இளம் வீரர் பெடிங்ஹாம் 85 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணி இறுதியாக 247 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. நியூசிலாந்து தரப்பில் ஜெமிசன் 4, சான்ட்னர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

முடிவில் நியூசிலாந்து அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட டெஸ்ட் வெற்றியை பெற்றது. இது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது மிகப்பெரிய டெஸ்ட் வெற்றியாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “பெரிய திறமைசாலி.. இந்த பையன் சீக்கிரத்துல எதையும் கத்துக்குவான்” – கவாஸ்கர் பேச்சு

மேலும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவதற்கு அனுபவம் இல்லாத வீரர்களை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் அனுப்பி வைத்திருப்பது, சாம்பியன் டிராபி புள்ளி பட்டியலில் இந்தியாவுக்கு பெரிய சிக்கலை கொண்டு வரக்கூடியதாக அமைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.