இந்திய கிரிக்கெட்

வெறும் 33 பந்து.. பின் ஆலன் வெறித்தனம்.. மீண்டும் தெ.ஆ சோக்கர்ஸ்.. நியூசி பைனலில் நுழைந்தது

இன்று டி20 உலக கோப்பை தொடரின் முதல் செமி பைனல் போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று நியூசிலாந்து பைனலுக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததில்லை என்ற சாதனையுடன் பேட்டிங் செய்ய வந்தது.

தென் ஆப்பிரிக்கா சரிவு

முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு குயிண்டன் டி காக் 8 பந்தில் 10 ரன், ரியான் ரிக்கல்ட்டன் கோல்டன் டக், கேப்டன் எய்டன் மார்க்ரம் 20 பந்தில் 18 ரன், டிவால்ட் பிரிவிஸ் 27 பந்தில் 34 ரன், டேவிட் மில்லர் 6 பந்தில் 6 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதைத்தொடர்ந்து ஸ்டப்ஸ் 24 பந்தில் 29 ரன்கள் எடுத்தார். இன்னொரு முனையில் அதிரடியாக விளையாடிய மார்க்கோ யான்சன் 30 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 55 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார். இறுதியாக தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. ரச்சின் ரவீந்தரா மற்றும் மேட் ஹென்றி தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

நியூசிலாந்து அதிரடி வெற்றி

இதைத் தொடர்ந்து விளையாட வந்த நியூசிலாந்து அணிக்கு முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 9.1 ஓவரில் அதிரடியாக 117 ரன்கள் வந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் டிம் செய்பர்ட் 33 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 58 ரன்கள், இதற்கடுத்து பின் ஆலன் ருத்ர தாண்டவம் ஆடி 33 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் சதம் அடித்தார். இதைத்தொடர்ந்து நியூசிலாந்து 13 ஓவர்களில் அதிரடியாக போட்டியை வென்று இறுதிப்போட்டியில் நுழைந்தது.

இதையும் படிங்க : அபிஷேக்குக்கு இது நடந்தா போதும்.. இந்தியாவை தனியா ஜெயிக்க வைப்பார் – மோர்னே மோர்கல் பேச்சு

மேலும் டி20 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணியை முதல்முறையாக நியூசிலாந்து வென்றது. இத்துடன் டி20 உலக கோப்பையில் குறைந்த பந்துகளில் சதம் அடித்து பின் ஆலன் சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -
Published by