இந்திய கிரிக்கெட்

மேக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.. விராட் கோலிக்கு சிறப்பு நன்றி – வெளியான தகவல்கள்

​ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் சக வீரரான விராட் கோலி குறித்தும் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு இதை பேசி உள்ளார்.

- Advertisement -

​கிரிக்கெட் உலகில் சிக்சர் மன்னனாக வலம்வரும் கிளென் மேக்ஸ்வெல் பல மறக்க முடியாத மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளார். குறிப்பாக அழுத்தமான தருக்களிலும், இக்கட்டான சூழல்களிலும் இவரது அதிரடியான பேட்டிங் அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளது.

​உலகின் முன்னணி ஜாம்பவான்களுடன் இணைந்து விளையாடியுள்ள இவர், இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலியுடன் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக இணைந்து விளையாடிய அனுபவங்களையும், அவருடனான நட்பையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

​இதுகுறித்து கிளென் மேக்ஸ்வெல் பேசும்போது “விராட் கோலி கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவர் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அவர் களத்தில் வெளிப்படுத்தும் தீவிரமும், ரன்களைக் குவிப்பதற்கான பசியும் என்னை வியக்க வைத்துள்ளன. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடிய பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஷாட்டுகளையும் இன்னிங்ஸ்களையும் என்னால் என் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாது. எதிரணியாக இருந்தாலும் சரி, அணியின் உடன் விளையாடும் வீரராக இருந்தாலும் சரி, அவர் கிரிக்கெட்டுக்குச் செய்த பங்களிப்பு தனித்துவமானது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -
Published by