அபிஷேக்குக்கு இது நடந்தா போதும்.. இந்தியாவை தனியா ஜெயிக்க வைப்பார் – மோர்னே மோர்கல் பேச்சு

0
11
Morkel

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா ரன் எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருவதை குறித்து பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பேசியிருக்கிறார்.

நாளை நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா இங்கிலாந்து அணிகள் இரண்டாவது செமி பைனலில் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டியில் இந்திய டாப் ஆர்டர் எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்து இந்திய அணியில் அமையும்.

- Advertisement -

இது நடக்க வேண்டும்

இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் அபிஷேக் ஷர்மா மீண்டும் பேட்டிங் ஃபார்முக்கு திரும்பி வருவதற்கு என்ன நடக்க வேண்டும்? என்பது குறித்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து மோர்னே மோர்கல் பேசும்போது “அபிஷேக் ஷர்மா ஃபார்ம் பற்றி நாம் பேசும் பொழுது, அவரின் விளையாட்டு அணுகுமுறை என்னவென்றால், ஒன்று அல்லது இரண்டு சிறந்த ஷாட்கள் அவருடைய ரிதத்தை மீண்டும் கொண்டு வந்து விடலாம். அவர் டெக்னிக் பற்றி கவலைப்படக்கூடியவர் கிடையாது. இப்படியான பேட்ஸ்மேன்கள் திரும்பி வருவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும்”

- Advertisement -

நல்ல வாய்ப்பு

“நான் சொன்னது போல நாளை அவருக்கு ஒரு புதிய தொடக்கம். மீண்டும் உள்ளே சென்று விளையாட ஒரு நல்ல வாய்ப்பு. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு சதம் அடித்திருக்கிறார்”

இதையும் படிங்க : அபிஷேக் ஷர்மாவை நீக்கிவிட்டு ரிங்கு சிங்.. கம்பீர் யோசிக்கும் பிளான்.. ரவி சாஸ்திரி தந்த விளக்கம்

“அவர் செய்ய வேண்டியது என்னவென்றால் அவரின் நல்ல தருணங்களின் வீடியோக்களை நினைவில் கொண்டுவந்து, அந்த உணர்வுகளை மீண்டும் உருவாக்கி, ஒரு திட்டத்தை உருவாக்கி, நாளை பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன் என்று எண்ணிக் கொண்டு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -