இந்திய கிரிக்கெட்

ஹர்திக் பாண்டியா எப்போது வந்தாலும் இப்படித்தான் வர முடியும்.. உண்மை நிலை இதுதான் -கில் பேட்டி

​இந்திய அணியின் கேப்டன் ஷப்மன் கில், ஹர்திக் பாண்டியா இன்ஜுரி மற்றும் அவரது ரீ-என்ட்ரி குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

- Advertisement -

​இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை எதிர்கொள்ள உள்ள நிலையில், அணியின் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை மற்றும் அவரது கம்பேக் குறித்த முக்கிய தகவல்களை கேப்டன் பகிர்ந்துள்ளார்.

​ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு தரமான வீரரின் இழப்பு அணிக்கு எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதையும், அவர் மீண்டும் அணிக்குத் திரும்புவது அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் பலத்தை எப்படி உயர்த்தும் என்பதையும் அணி நிர்வாகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

​இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ஷப்மன் கில் பேசும்போது “ஹர்திக் பாண்டியா ஒரு அற்புதமான ஆல்-ரவுண்டர் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை, உலகத்தில் அவரது திறமையைப் போன்ற ஸ்கில்செட் கொண்ட வீரர்கள் மிகக் குறைவுதான். நாம் அவரை பவுலராக மேட்சின் பல வெவ்வேறு கட்டங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்”

- Advertisement -

“அவர் புதிய பந்தையும் பழைய பந்தையும் திறம்பட வீசக்கூடியவர். நாங்கள் அவருடன் பலமுறை உரையாடல்களை மேற்கொண்டிருக்கிறோம், துரதிர்ஷ்டவசமாக அவர் இன்ஜுரிக்கு ஆளாகிவிட்டார், ஐபிஎல் தொடருக்குப் பிறகு அவர் விளையாடவே இல்லை. அவர் விரைவில் குணமடைந்து திரும்புவார் என்று நம்புகிறோம், அவர் சில உள்ளூர் போட்டிகளில் விளையாடிய பிறகு விரைவில் இந்திய அணிக்குத் திரும்புவார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by