நியூசிலாந்து உடன் பாகிஸ்தான் டிரா ; டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்!

0
4849
WTC

2021 – 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஓட்டத்தில் தற்போது மிக முக்கியமான டெஸ்ட் தொடர்கள் கிரிக்கெட் உலகில் நடைபெற்று வருகின்றன!

இந்த மாத துவக்கத்தில் முதல் இரண்டு இடத்தில் ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இருந்தன. இதற்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா வந்து முழுமையாக தொடர இழந்தது.

- Advertisement -

இந்த வெற்றியா ஆஸ்திரேலியா அணி அசைக்க முடியாத இடத்தில் புள்ளி பட்டியலில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. தென்னாபிரிக்க அணி இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா வந்து தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து தோற்று தனது இரண்டாவது இடத்தை பறிகொடுத்துள்ளது.

இந்த முடிவுகள் எல்லாம் நான்காம் இடத்தில் இருந்த இந்திய அணியை இரண்டாம் இடத்திற்கு தற்போது கொண்டு வந்துள்ளது. அடுத்து பிப்ரவரி மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணி உடன் நடக்க இருக்கும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி மூன்று வெற்றிகளை பெறுமானால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்!

தற்பொழுது ஆஸ்திரேலியா அணி 78.57 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்திய அணி 58.93 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இலங்கை அணி 53.33 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா அணி 50 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளது.

- Advertisement -

தற்பொழுது இந்த நான்கு அணிகளும்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஓட்டத்தில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் வெளியேறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது!