முதல் முறை.. ஆப்கான் கிரிக்கெட் நடத்தும் வரலாற்று தொடர்கள்.. தென் ஆப்பிரிக்கா நியூசிலாந்து அணிகள் வருகை

0
947

கிரிக்கெட் உலகில் வளர்ந்து வரும் அணிகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் அணியின் எழுச்சி சமீபகாலமாகவே அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் அமைந்து வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நாள் உலக கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையை சொல்லலாம்.

இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் கிரிக்கெட்டை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக இரண்டு முன்னணி அணிகளுக்கு எதிரான தொடரை தனது சொந்த மண்ணில் நடத்த உள்ளது.

- Advertisement -

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற கிரிக்கெட்டில் வல்லரசு நாடுகளுக்கு நடுவே வங்கதேசம், ஜிப்பாப்வே போன்ற அணிகள் கிரிக்கெட்டை வெகு காலமாக விளையாடி வந்த போதிலும் இன்னும் வளர்ந்து வரும் அணிகளாகவே கருதப்படுகின்றன. இந்த இரண்டு சூழ்நிலைகளுக்கு நடுவே ஆப்கானிஸ்தான் அணியின் கிரிக்கெட் எழுச்சி என்பது அபாரமான வகையில் அமைந்துள்ளது. சிறிய அணியாக தொடங்கி சர்வதேச அங்கீகாரம் கிடைத்த குறைவான வருடங்களிலேயே வீரர்கள் தங்களது திறமையை அபாரமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் மிகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி அதற்குப் பிறகு சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் அரை இறுதி வரை வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதுவே அந்த அணிக்கு வெற்றி என்று கருதப்பட்ட நிலையில் தற்போது சொந்த மண்ணில் இரண்டு முன்னணி அணிகளோடு கிரிக்கெட் தொடரை விளையாட உள்ளது.

- Advertisement -

நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் சுற்றுப்பயணம் செய்து ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கின்றன. நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரையும், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரையும் ஆப்கானிஸ்தான் நடத்த உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் பங்கு பெற மாட்டார் என்று தெரிகிறது. ஏனெனில் சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட காயம் மற்றும் விரைவில் வரும் ஐசிசி தொடர்களை கருத்தில் கொண்டு இந்த முடிவை மேற்கொண்டு உள்ளதாக தெரிகிறது

ஒரு வளர்ந்து வரும் அணி தங்களது அபார உழைப்பின் மூலமாக இரண்டு சர்வதேச அணிகளை தங்களது மண்ணில் சுற்றுப்பயணம் செய்ய வைத்து விளையாட வைப்பது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஒரு வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது. மேலும் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் தீவிர படுத்தப்பட்ட வருகின்றன.

இதையும் படிங்க:இந்தியாவுக்கு ஒரு பிளஸ்.. ஆஸிக்கு ஒரு மைனஸ்.. அது 24 காரட் தங்கம்.. கப் எங்களுக்கே – ரவி சாஸ்திரி சவால்

“எங்கள் அன்பான ஆப்கானிஸ்தான் அணியோடு எங்கள் இதயங்களும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நேரத்தில் வரலாற்றில் முதல் முறையாக உலகின் இரண்டு முன்னணி அணிகள் ஆப்கானிஸ்தான் மண்ணில் விளையாட இருப்பது எங்களை பிரகாசமாக்கி இருக்கிறது. ஒன்றுபடுத்துவோம். நமது தேசத்தை பெருமைப்படுத்துவோம்” என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமூக வலைதளத்தில் இந்த பதிவை வெளியிட்டுள்ளது.

- Advertisement -