நியூயார்க் மைதானத்தில் பிரச்சனை இருக்கு.. வீரர்கள் காயம் அடைய போறாங்க – ராகுல் டிராவிட் கவலை

0
85
Dravid

ஐசிசி கிரிக்கெட்டை உலகின் பல நாடுகளுக்கும் கொண்டு செல்லும் விதமாக, தற்பொழுது எட்டாவது டி20 உலக கோப்பை தொடரை வெஸ்ட் இண்டிஸ் நாட்டுடன் பகிர்ந்து அமெரிக்காவிலும் நடத்துகிறது. தற்போது இந்திய அணி நியூயார்க்கில் முதல் சுற்றில் மூன்று போட்டிகளில் விளையாடுகிறது. இந்த மைதானம் குறித்து இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கவலை தெரிவித்திருக்கிறார்.

கடந்த வருடம் முதல் நியூயார்க் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் அங்கு வேலைகள் முழுமை அடைந்து தற்பொழுது டி20 உலகக் கோப்பை தொடருக்கு திறக்கப்பட்டிருக்கிறது. இதில் மொத்தம் இந்த முறை எட்டு போட்டிகள் நடக்க இருக்கின்றன.

- Advertisement -

இதில் இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடுகிறது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இந்த மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மைதானம் கட்டப்பட்ட விதம், மற்றும் ட்ராப் இன் ஆடுகளம் என மிகவும் அருமையான வசதிகளுடன் காணப்படுகிறது.

நேற்று இந்த மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி பயிற்சி போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் மைதானத்தின் அவுட் ஃபீல்டு குறித்து இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் புகார் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ராகுல் டிராவிட் பேசும் பொழுது “நல்ல விஷயங்களை பெறுவது நல்லது. அவர்கள் மிக வேகமாக இந்த மைதானத்தில் எல்லா தயாரிப்புகளையும் கொண்டு வந்திருக்கிறார்கள். இங்கு அவுட் ஃபீல்டு கொஞ்சம் மென்மையாக இருக்கிறது. இதன் காரணமாக வீரர்கள் காயம் அடைய வாய்ப்பு இருப்பதாக உணர்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் டி20 உலக கோப்பையை பார்க்கவே விரும்பல.. அதுக்கு காரணம் இதுதான் – ரியான் பராக் பேட்டி

சில சமயங்களில் ஆடுகளத்தில் ஸ்பான்ச் பவுன்ஸ் இருந்தது. நாங்கள் அதை நல்ல விதமாகவே சமாளித்தோம் என்று நினைக்கிறேன். பேட்ஸ்மேன்கள் இந்த ஆடுகளத்திற்கு தேவையான ரன்களை கொண்டு வந்தார்கள். பந்துவீச்சாளர்களும் சிறப்பான முறையில் பந்து வீசினார்கள். நாங்கள் அடுத்த இரண்டு நாட்களில் இன்னும் சிறப்பாக தயாராவோம்” என்று கூறியிருக்கிறார்.