இந்திய அணியின் வெற்றி கொண்டாட்ட புதிய மூன்று நிமிட வீடியோ!

0
7357
ICT

எட்டாவது உலக கோப்பை பிரதான சுற்றில் இரண்டாவது நாள் இன்று இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் விளங்கினார்கள். விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் தந்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பேட்டிங்கில் 37 பந்துகள் சந்தித்து 40 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இந்திய அணியின் இந்த வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானம் இந்திய ரசிகர்களின் மகிழ்ச்சி வெள்ளத்தால் தளும்பியது. இன்னொரு புறத்தில் இந்திய அணியில் வீரர்களும் தங்களது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது வெளிப்படுத்தியபடி மைதானத்தில் இருந்தனர்.

இந்த போட்டியின் முடிவுக்கு பிறகு விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா கண்கலங்கியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரோஹித் சர்மா மைதானத்திற்குள் வந்து விராட் கோலியை தூக்கிச் சுற்றி கொண்டாடியதும் நடந்தது.

பிறகு ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் விராட் கோலியை மைதானத்தைச் சுற்றி அழைத்துக்கொண்டுபோய் ரசிகர்களுக்கு தம்ஸ் அப் காட்டி மகிழ்ச்சியை கூட்டினார்கள்.

- Advertisement -

போட்டி முடிந்து ஓய்வு அறைக்கு திரும்பிய விராட் கோலியை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கட்டியணைத்து வரவேற்று உணர்ச்சி பொங்க பாராட்டியதும் நடந்தது. இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!