சும்மாவே ஜெயிக்கிறது கஷ்டமா இருக்கு.. இதுல புதுப்புது ரூல்ஸ் கொண்டுவந்து இன்னும் கஷ்ட படுத்துறாங்க – வெற்றிக்குப்பின் புலம்பிய டு பிளசிஸ்!

0
564

இப்போது வந்திருக்கும் புதிய விதிமுறைகள் வெற்றியை இன்னும் கடினமாக்குகிறது. இந்த விதிமுறைகளினால் எப்பேர்ப்பட்ட இலக்கும் எளிதாக இருக்கிறது என்றார் ஆர்சிபி கேப்டன் டு பிளசிஸ்.

நேற்றைய தினம் நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளின் ஒன்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு முன்னால் கேப்டன் விராத் கோலி மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார்.

- Advertisement -

மற்ற வீரர்கள் சற்று சொதப்பலாக விளையாடியதால் 200 ரன்கள் எட்ட வேண்டிய ஸ்கோர் 174க்குள் முடிந்தது. 175 ரன்கள் எனும் இலக்கை துரத்தி முதல் வெற்றியை பெறலாம் என்கிற முனைப்பில் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆர்சிபி பவுலர்கள் அச்சுறுத்தலாக திகழ்ந்தனர்.

முதல் 6 ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே அடித்து 4 விக்கெட்டுகளை இழந்தது. டெல்லியை அணிக்கு மனிஷ் பாண்டே மிடில் ஆர்டரில் போராடியும் அது இலக்கை எட்டுவதற்கு உதவவில்லை. பின்னர் 20 ஓவர்கள் முடிவில் 151 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தொடர்ந்து ஐந்தாவது முறையாக தோல்வியையும் தழுவியது.

போட்டி முடிந்த பிறகு வெற்றி பெற்ற ஆணையத்தின் கேப்டன் பாப் டு பிளசிஸ் பேசுகையில்,

- Advertisement -

“இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது. எங்களுக்கு மத்தியில் நம்பிக்கை கொண்டுவர தேவைப்பட்டது. போட்டியில் பவுலர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால் இது சாத்தியப்பட்டிருக்காது. அவர்களை நினைத்து பெருமிதமாக கருதுகிறேன். பவர்-பிளே ஓவர்களிலேயே எங்களை ஆட்டத்தில் முன்னே கொண்டு சென்றுவிட்டார்கள்.

சிராஜ் ஒவ்வொரு போட்டியிலும் பவர்-பிளே ஓவர்களில் தாக்கம் ஏற்படுத்துகிறார். மற்ற வீரர்கள் இவருக்கு சப்போர்ட் செய்தார்கள். ஒட்டுமொத்தமாக எங்களது அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் தான் இந்த வெற்றிக்கு சாத்தியப்படுத்தினார்கள்.” என்றார்.

பின்னர் தொடர்ந்து பேசிய அவர், “தற்போது வந்திருக்கும் புதிய புதிய ரூல்ஸ் சிக்கலாக இருக்கிறது. எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் புதிய வீரரை வைத்து எளிதாக கடந்து விடுவதற்கு உதவுகிறது. இந்த வகையிலும் கட்டுப்படுத்தி பந்துவீசியது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.” என்றார்.