இந்தியத் தேர்வுக்குழுவின் புதிய தலைவர் ; 2007 உலகக்கோப்பை சாம்பியன் வீரர்!

0
5908
Ict

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா இந்திய கிரிக்கெட்டின் முழு விவகாரங்களை வெளியே கசிய விட்டதின் காரணமாக, அவரே தன் பதவியை ராஜினாமா செய்து விலகிக் கொண்டார்!

இதையடுத்து தற்பொழுது புதிய தேர்வுக்குழு தலைவருக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ திறந்து இருந்தது. தகுதியின் அடிப்படையில் இதிலிருந்து புதிய தேர்வுக்குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்!

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் தேர்வு குழு தலைவராக வருவதற்கு இந்திய அணிக்காக 7 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் அல்லது உள்நாட்டு முப்பது முதல் தரப் போட்டிகள் அல்லது பத்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் 20 முதல் தரப் போட்டிகள் விளையாடியிருக்க வேண்டும்.

தேர்வுக்குழு தலைவருக்கான பொறுப்புகள் :

நியாயமான முறையில் வெளிப்படையாக சிறந்த அணியை தேர்ந்தெடுக்க வேண்டும். தேசிய அணிக்கு சிறந்த பெஞ்ச் பலத்தை உருவாக்க வேண்டும்.

தேர்வுக்குழு கூட்டங்களில் தேவைப்படும் நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும். போட்டிகள் நடைபெறும் போது உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ பார்ப்பதற்காக பயணம் செய்ய வேண்டும்.

- Advertisement -

காலாண்டுக்கு ஒரு முறை இந்திய கிரிக்கெட் மூன்று வடிவ அணியும் எவ்வாறு செயல்பட்டு இருக்கிறது என்ற மதிப்பீட்டு அறிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தாக்கல் செய்ய வேண்டும்.

இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தல்படி அணிகள் தேர்வு குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அணிக்கான கேப்டனை சரியான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்குமுறை மற்றும் விதிகளை பின்பற்ற வேண்டும்.

இப்படி தேர்வு குழுவுக்கும் அதன் தலைவருக்கும் பொறுப்புகள் இருக்கின்றது. மேலும் பல பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்த பொறுப்புக்கு விண்ணப்பிக்காததற்கு முக்கிய காரணம் குறைவான சம்பளம் என்று கூறப்பட்டது. தற்பொழுது சம்பள உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டின் புதிய தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் ஏகப்பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் விண்ணப்பித்திருப்பதாக செய்திகள் வருகிறது. இவரே இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த பொறுப்பில் இருக்கும் பொழுது வேறு எந்தவிதமான கிரிக்கெட் சம்பந்தமான பொறுப்புகளிலும் இருக்கக் கூடாது. எனவே அஜித் அவர்கள் ஐபிஎல் டெல்லி அணியில் தனக்கு இருந்த பொறுப்பை சில நாட்களுக்கு முன்பு துறந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது