“ஐபிஎல்-ல் இந்த மாதிரி விசுவாசமான வீரரை பார்க்கவே முடியாது” – ஆகாஷ் சோப்ரா நேரடியான பேச்சு

0
74
IPL

உலகில் இருக்கும் எல்லா கிரிக்கெட் வீரர்களும் விளையாட விரும்பும் பிரான்சிசைஸ் டி20 லீக் தொடராக ஐபிஎல் தொடர் இருக்கிறது.

பெரிய அளவில் சம்பளம் கிடைக்கிறது என்பது மட்டும் இல்லாமல், பயிற்சியில் ஆரம்பித்து பாதுகாப்பு வரை எல்லாமே உயர் தரத்தில் வீரர்களுக்கு கிடைக்கிறது.

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதின் மூலம் உலகின் பல நாடுகளில் இருந்து வரும் நட்சத்திர வீரர்களுடன் அனுபவத்தை பெற்று பகிர்ந்து கொள்ள முடிகிறது.

இப்படிப்பட்ட ஐபிஎல் தொடரில் சில நேரங்களில் தங்களை ஆதரித்த அணிகளை விட்டு, வீரர்கள் வேறு ஒரு அணிக்கு தங்களின் விருப்பத்தின் காரணமாக செல்லும் நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

கர்நாடக வீரரான கேஎல்.ராகுலை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கழட்டிவிட்ட பொழுது, அவரை வாங்கி கேப்டனாக ஆதரித்த அணி பஞ்சாப். ஆனால் அவர் இறுதியில் பஞ்சாப்பை விட்டு லக்னோ அணிக்கு திரும்பினார்.

- Advertisement -

தன் அணியான மும்பை தன்னை ஆதரிக்காத போது, கேப்டன் பதவி கொடுத்து ஆதரித்த அணியான குஜராத்தை விட்டு, மீண்டும் மும்பை அணிக்கே ஹர்திக் பாண்டியா திரும்பினார். இது மும்பை தங்களுக்கு ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்த, ரோகித் சர்மாவை ஹர்திக் பாண்டியாவுக்காக கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது. இப்படியான சம்பவங்கள் ஐபிஎல் தொடரில் இருக்கிறது.

தற்பொழுது இதை வைத்து ஐபிஎல் தொடரில் மிக விசுவாசமான வீரர் யார் என்று ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “விராட் கோலி ஆர் சி பி அணிக்கு காட்டும் விசுவாசம் என்பது பெரிய விஷயம். அவருடைய லாயல்டிதான் ராயல்டி. அவர் வெளியில் இருந்து வந்த எந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை. ஏலத்திற்கு முன்னும் எதுவும் அணிக்குள் நடக்கவில்லை. அந்த அளவிற்கு அவர் அந்த அணியுடன் ஒட்டி இருந்தார்.

விராட் கோலி ஒரு வலிமையான வீரர் வருடம் தோறும் ரன்கள் குவித்தார். தோல்வியை விரும்பாத அந்த வீரரான அவருக்கு வெற்றிகள் கிடைக்கவே இல்லை. இருந்தாலும் அவர் ஆர்சிபி அணிக்கு விசுவாசமாகவே இருந்தார்.

தான் விளையாடும் வரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடுவேன் என்று அவர் கூறுகிறார். பிரான்சிசைஸ் டி20 கிரிக்கெட் லீக்குகளில் இதுபோன்ற அர்ப்பணிப்பை நீங்கள் அரிதாகவே பார்க்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.