“நியூசிலாந்தில் இப்படி ஒரு ஆட்டத்தை இதுவரை பார்த்ததில்லை!” – ராஸ் டெய்லர் வியப்பு!

0
3299
Sky

இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ‘T20’ போட்டிகள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் தடைபட்ட நிலையில், இரண்டாவது ‘டி20’ போட்டி கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ‘மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான’ ‘சூரியகுமார் யாதவ்’ தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.இந்த சதமானது, டி20 கிரிக்கெட் உலகத்தின்  மிகச் சிறந்த சதமாக கிரிக்கெட் வல்லுனர்களாலும் கிரிக்கெட் ரசிகர்களாலும் கொண்டாடப்படுகிறது.

பல்வேறு கிரிக்கெட் வல்லுனர்களும், முன்னாள் வீரர்களும் சூரிய குமாரின் இந்த ஆட்டத்தைப் பற்றி தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நியூஸிலாந்தின் முன்னாள் வீரரான “ரோஸ் டைலர்” சூரியகுமார் யாதவின ஆட்டத்தை “தான் நியூசிலாந்து மண்ணில் கண்ட மிகச்சிறந்த சதம் இதுதான்” என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பது “நான் நியூஸிலாந்து மண்ணில் எத்தனையோ ஆட்டங்களை கண்டிருக்கிறேன்;’பிரண்டன் மெக்கல்லம்’,’மார்ட்டின் கப்டில்கோலி’ன் ஆகியோரின் ஆட்டங்களை நான் இதற்கு முன் கண்டிருக்கிறேன்,அவர்களின் சதங்களையும் இந்த நியூசிலாந்து மண்ணில் கண்டிருக்கிறேன் ஆனால் ‘சூரிய குமாரின்’ ஆட்டம் இவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது”.

” அவர் மிகவும்  அலாதியாக ஒவ்வொரு பந்துகளையும் ஆடினார் அவர் கடினமான ‘ஷாட்’ மட்டும் நம்பி இருக்காமல்  ‘டைமிங்’கின் மூலமும் ‘பில்டிங்’ வியூகங்களுக்கு இடையே இருக்கும் ‘கேப்’புகளை பயன்படுத்தி தன்னுடைய ரன்களை சேகரித்தார்.நான் நியூசிலாந்து மண்ணில் கண்ட மிகச்சிறந்த ஒரு  இன்னிங்ஸ்” என்று கூறினார்.

“சூரியகுமார் யாதவ்’ தான் தற்பொழுது டி  டி20 கிரிக்கெட் போட்டியின் மிகச் சிறந்த பேட்ஸ்மனாக உருவெடுத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார் . அவர் ஷாட்டுகளை தேர்ந்தெடுக்கும் விதமும் ,மைதானத்தில் காலியாக உள்ள இடங்களில் பந்தை  திருப்பி ஆடும் அவரது சாதுர்யமும் அவரது பெரிய பலம்” என்று கூறியுள்ளார். மைதானத்தின் குறிப்பிட்டு ஒரு திசை  என்று இல்லாமல் மைதானத்தில் எந்த மூலைகளையும்  தன்னாலேயே Achcha பெற முடியும் என்று சூரியகுமார்  நிரூபித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.