“பாகிஸ்தான் நெதர்லாந்து கூட தோக்கும்.. காரணம் இதுதான்!” – நாசர் ஹுசைன் அதிரடி பேச்சு!

0
271
Hussain

நாளை மறுநாள் மிகவும் பிரம்மாண்டமாக, உலகின் மிகப்பெரிய மைதானமான குஜராத் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில், 13-வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியின் மூலம் துவங்க இருக்கிறது!

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐந்து முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வென்றுள்ள ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த முறை தமிழகத்தில் இருந்து உலகக் கோப்பை பயணத்தை இந்திய அணி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் அக்டோபர் பதினொன்றாம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டெல்லியில் விளையாட இருக்கிறது. மூன்றாவது போட்டியாக பாகிஸ்தான் அணிகளுடன் அக்டோபர் 14ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்திற்கு திரும்புகிறது.

தற்பொழுது ஆறு ஆண்டுகள் கழித்து இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் முகாமிட்டு இருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு இங்கு இரண்டு போட்டிகள் உண்டு. மேலும் இரண்டு பயிற்சி போட்டிகளில் இதே மைதானத்தில் நடக்கிறது.

இதன் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு நல்ல ஓய்வும், அதே சமயத்தில் விளையாட இருக்கின்ற மைதான சூழலும், ஆடுகளத்தின் சூழலும் மிகவும் பழக்கமான ஒன்றாக மாறக்கூடிய சாதக நிலைமை இருக்கிறது.

- Advertisement -

ஆசியக் கோப்பையில் யாரும் எதிர்பாராத வகையில் மிக மோசமாக செயல்பட்டு, சொந்த நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு, முதல் பயிற்சி போட்டியில் 345 ரன்கள் எடுத்தும் நியூசிலாந்து அணி உடன் தோல்வி கண்டு, தற்பொழுது பாகிஸ்தான் மனரீதியாக நம்பிக்கை இழந்தே காணப்படுகிறது.

பாகிஸ்தான் அணி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறும்பொழுது
“பாகிஸ்தான் உலகக் கோப்பை தொடரில் சிறந்த அணி என்று நான் நினைக்கிறேன். அவர்கள் முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறார்கள். ஆனால் இந்த போட்டியில் பாகிஸ்தான் தோற்கவும் கூடும். இதுதான் பாகிஸ்தான் உங்களுக்கு தரக்கூடியது. பின்பு அவர்கள் மிக வேகமாக ஓடுவார்கள்.

கடைசி டி20 உலகக் கோப்பையை பாருங்கள். ஆரம்பத்தில் அவர்கள் தொடரை விட்டு வெளியேறி விட்டனர். திடீரென்று அவர்கள் இறுதிப் போட்டிக்கு வந்தனர். அவர்கள் கணிக்க முடியாத நிலைத்தன்மை அற்றவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் அதுவே அவர்கள் விளையாடும் கிரிக்கெட் பிராண்ட் மற்றும் ஸ்டைல். அவர்கள் நம்ப முடியாத அணி. உலகக் கோப்பையில் எந்த அணியாக இருந்தாலும் உங்களுக்கு சமமான ஸ்கோரை எடுத்து இருந்தால் நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்!” என்று கூறியிருக்கிறார்!