ஸ்காட்லாந்து அணி வெளியேற்றம்… 10ஆவது அணியாக உலகக்கோப்பைக்குள் நுழைந்த நெதர்லாந்து! – உலகக்கோப்பை குவாலிபயரில் பரபரப்பு!

0
3462

உலகக்கோப்பை குவாலிபயர் சூப்பர் சிக்ஸ் கடைசி போட்டியில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி 10ஆவது அணியாக உலககோப்பைக்குள் நுழைந்தது நெதர்லாந்து.

உலகக்கோப்பை குவாலிஃபயர் சூப்பர் சிக்ஸ் சுற்றின் கடைசி போட்டியில் வாழ்வா? சாவா? எனும் நிலையில் ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து இரு அணிகளும் மோதின. இதில் வெற்றி பெறும் அணி பத்தாவது அணியாக உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.

- Advertisement -

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணிக்கு துவக்க வீரர் கிராஸ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரர் கிறிஸ்டோபர் 32 ரன்களுக்கு ஆட்டம் இழந்த பிறகு பார்ட்னர்ஷிப் அமைத்த ப்ரண்டன் மற்றும் பெர்ரிங்டன் இருவரும் ஸ்காட்லாந்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர்.

இதில் ப்ரண்டன் 16 ரன்களுக்கு அவுட் ஆனார். பெர்ரிங்டன் 64 ரன்களுக்கு அவுட் ஆனார். கடைசியில் தாமஸ் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 38 ரன்கள் அடித்தார். ஒன்பது விக்கெட்டுகளை இழந்த ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 277 ரன்கள் அடித்தது. டி லீட் பந்துவீச்சில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

278 ரன்கள் அடித்து வெற்றி பெற்றால் உலகக்கோப்பைக்குள் சென்று விடலாம் என்கிற கனவுடன் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு துவக்க வீரர் விக்ரம்ஜித் சிங் 40 ரன்கள், மேக்ஸ் 20 ரன்கள் அடித்து அவுட் ஆகினர். அடுத்து வந்த வீரர்கள் சொற்பரன்களுக்கு வெளியேறினார். கேப்டன் எட்வார்ட்ஸ் 25 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அபாரமாக விளையாடிய டி லீட் 123 ரன்கள் குவித்து திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

- Advertisement -

கடைசியில் வந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அபாரமாக விளையாடிய சகிப் 33 ரன்கள் அடித்துக்கொடுக்க 42.5 ஓவர்களில் 278 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது நெதர்லாந்து அணி. அத்துடன் பத்தாவது அணியாக உலக கோப்பைக்குள் நுழைந்தது.

உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டி நவம்பர் 11ஆம் தேதி பெங்களூருவில் நடக்கிறது