வீடியோ.. 6,6,6,6,6,6.. ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்.. நேபாள் வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை

0
108
Airee

தற்போது ஆசிய கண்டத்தில் இருந்து கிரிக்கெட்டில் நேபாள் அணி மிகவும் கவனிக்கத்தக்க அணியாக மாறி வருகிறது. நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்திய அணிக்கும் சவால் கொடுக்கக்கூடிய வகையில் விளையாடுகிறது. இன்று கத்தார் அணிக்கு எதிராக விளையாடிய நேபாள் அணி வெற்றி பெற்றதோடு, அந்த அணியின் திபேந்திர சிங் ஆரி ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து அசத்தியிருக்கிறார்.

இன்று கத்தார் அணிக்கு எதிராக டி20 போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆசிப் ஷேக் 41 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து குசால் மல்லா 18 பந்தில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

பேட்டிங்கில் நான்காவது இடத்தில் வந்த திபேந்திர சிங் ஆரி வழக்கம்போல் அதிரடியில் மிரட்ட ஆரம்பித்தார். மிகச் சிறப்பாக விளையாடிய இவர் வெறும் 21 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்களுடன் ஆட்டம் இழக்காமல் 64 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 304.76 என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட இந்தப் போட்டியில் கத்தார் அணியின் கம்ரன் கான் வீசிய இருபதாவது ஓவரில் தொடர்ந்து 6 சிக்ஸர்களை அடித்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் நேபாள் அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. இதற்கு அடுத்து பேட்டிங் செய்த கத்தார் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இன்று ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த திபேந்திர சிங் ஆரி, சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மங்கோலியா அணிக்கு எதிராக இரண்டு ஓவர்களில் தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்திருந்தார். மேலும் அந்தப் போட்டியில் 9 பந்துகளில் அரைசதம் அடித்து யுவராஜ் சிங்கின் சாதனையை உடைத்து உலகச் சாதனையும் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : பிரித்வி ஷா கிட்ட இத மட்டும் எதிர்பார்க்காதிங்க.. அவர் அவ்வளவுதான் – டாம் மூடி விளக்கமான பேச்சு

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் இங்கிலாந்துக்கு எதிராகவும், மேலும் பொல்லார்டு இலங்கை அணிக்கு எதிராகவும் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்திருக்கிறார்கள். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவின் கிப்ஸ், அமெரிக்காவின் ஜஸ்கரன் மல்கோத்ரா ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்திருக்கிறார்கள். தற்போது இவர் டி20 கிரிக்கெட்டில் மூன்றாவது வீரராகவும், ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் ஆறாவது வீரராகவும் இந்த சாதனையில் இணைந்திருக்கிறார்.