விராட் உங்க மனசு பெருசு.. நேபாள் வீரர் தரமான புதிய சாதனை.. அடுத்த சுற்றுக்கு இந்திய அணி நுழையுமா?.. ஆசிய கோப்பையில் பரபரப்பு!

0
2010
Virat

பதினாறாவது ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரு நாடுகளில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது!

இந்த நிலையில் இந்திய அணி மற்றும் நேபாள் அணி முதல் சுற்றில் இரண்டாவது மற்றும் கடைசிப் போட்டியில் இன்று இலங்கை கண்டி மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி வென்றாலோ டிரா ஆனாலோ அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். அதே சமயத்தில் நேபாள் அணி வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் இந்த முறை பந்து வீசுவதாக அறிவித்தார். ஏற்கனவே பாகிஸ்தான் அணியுடன் பேட்டிங் செய்திருந்தது இந்திய அணி. தற்பொழுது பந்துவீச்சாளர்களின் ரிதத்திற்காக இந்த முடிவு மழை அச்சுறுத்தல் காரணமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இன்று போட்டி துவங்கிய முதல் ஓவரின் ஆறாவது பந்தில் சமீப ஓவரில் விராட் கோலி ஒரு எளிய கேட்சை தவறவிட்டார். இதற்கு அடுத்து முகமது சிராஜின் இரண்டாவது ஓவரில் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு கேட்சை தவறவிட்டார். மேலும் முகமது சமியின் நான்காவது ஓவரில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் ஒரு கேட்சை தவறவிட்டார். இந்த மூன்றுமே எளிமையான வாய்ப்புகள் என்பதுதான் கவலைக்குரியது.

- Advertisement -

இதை பயன்படுத்திக் கொண்ட நேபால் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் முதல் பவர் பிளேவில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 65 ரன்கள் தேற்றிக்கொண்டார்கள். நேபாள் அணியின் நம்பிக்கை இந்திய அணி தவறவிட்ட கேட்சுக்களால் பெரிய அளவில் உருவெடுத்தது.

இந்த நிலையில் ஒரு துவக்க ஆட்டக்காரரான ஆஷிப் ஷேக் நிலைத்து நின்று விளையாடி இந்தியாவுக்கு எதிராக அரை சதம் அடித்தார். 97 பந்தில் 8 பவுண்டரி உடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவருக்குத்தான் விராட் கோலி முதல் ஓவரில் கேட்ச் விட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அரை சதத்தின் மூலம் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ரெகுலரான ஒரு அணிக்கு எதிராக தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். மேலும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒரு நாட்டிற்கு எதிரான நேபாள் அணியின் இரண்டாவது அரைசதமாக இது பதிவானது. இதற்கு முன்பு முதல் சதத்தை இவரது தம்பி அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இவரது சாதனை விராட் கோலி கொடுத்த வாய்ப்பு!

தற்பொழுது இந்திய அணி எதிர்பார்க்காத விதத்தில் நேபாள் அணி விளையாடி வருகிறது. மழை ஒரு பக்கம் குறுக்கிட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியா விக்கெட் இழந்து, மலை குறுக்கிட்டு ஆட்டம் நின்று, டக் வொர்த் லீவ்ஸ் விதியால் ஏதாவது அதிர்ச்சியான சம்பவங்களுக்கு கூட வாய்ப்பு இருக்கிறது!