148 ரன்.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய நேபாள்.. முதல் முறை வரலாற்று வெற்றி.. சரியும் கிரிக்கெட் சரித்திரம்

0
95
Nepal

நேற்று பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அசோசியேட் கிரிக்கெட் நாடான நேபாள் அணி முதல் டி20 போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறது.

ஆசியாவைச் சேர்ந்த நேபாள் அணி டெஸ்ட் அந்தஸ்து பெறாத அணியாக இருக்கிறது. சிறிய அணியான நேபாள் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற முழு உறுப்பினர் கிரிக்கெட் நாடான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் வெற்றியைப் பெற்றிருக்கிறது. அந்த அணியின் கிரிக்கெட் வரலாற்றில் முழு உறுப்பினர் அணிக்கு எதிரான முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிறப்பான பேட்டிங்

முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்ய வந்த நேபாள் அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. இதைத்தொடர்ந்து கேப்டன் ரோஹித் பவ்டேல் 35 பந்துகளில் 38 ரன்கள், குஷால் மல்லா 21 பந்துகளில் 30 ரன்கள், குல்சன் ஜா 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்கள்.

நேபாள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தரப்பில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

வரலாற்று வெற்றி

இதைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் கைல் மேயர்ஸ் 5, அமீர் ஜாங்கோ 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து வந்த அகஸ்தே 15, ஜாமல் ஆண்ட்ரூ 5, கீசி கார்தி 16, ஜேசன் ஹோல்டர் 5 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதையும் படிங்க : இலங்கை போட்டியை வைத்து இந்திய அணியை மதிப்பிடாதீங்க.. அங்க எந்த வீரர் இல்லன்னு பாக்கணும்.. ஸ்ரீகாந்த் பேட்டி

இதற்கு அடுத்து இறுதியில் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் கேப்டன் அகெல் ஹுசைன் 9 பந்தில் 18 ரன்கள், ஃபேபியன் ஆலன் 14 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து போராடினார்கள். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக விளையாடிய நேபாள் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.

- Advertisement -