இலங்கை போட்டியை வைத்து இந்திய அணியை மதிப்பிடாதீங்க.. அங்க எந்த வீரர் இல்லன்னு பாக்கணும்.. ஸ்ரீகாந்த் பேட்டி

0
123

ஆசியக் கோப்பை கிரிக்கட் தொடரில் இன்று நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. இரண்டு அணிகளும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தேர்வு குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை பொறுத்தவரை இந்திய அணி இதுவரை தோற்கடிக்க முடியாத அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக முன்னேறி இருக்கும் நிலையில் அபிஷேக் ஷர்மா இந்திய அணியின் முக்கிய தூணாக விளங்குகிறார். அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்து வரும் அவர் இந்த போட்டியிலும் அபாரமாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் பாகிஸ்தான் அணியும் இந்திய அணிக்கு எதிரான போட்டிகளைத் தவிர மற்ற போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு முன்னேறி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்கு எதிராக தாங்கள் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் இந்தப் போட்டி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “நான் பாகிஸ்தான் அணிக்கு ஒரு சதவீதம் வாய்ப்பு கூட கொடுக்க மாட்டேன். இலங்கை அணிக்கு எதிராக என்ன நடந்தது இந்திய அணி எப்படி தோற்கடிக்கப்பட்டது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அந்தப் போட்டியில் பும்ரா விளையாடவில்லை, அவருக்கு பதிலாக ஹர்ஷித் ரானா விளையாடினார். அவர் ஒரு தரமற்ற பந்துவீச்சாளர், அவர் ஒரு திரைப்பட பந்துவீச்சாளர். அவரை அடித்து நொறுக்கிய பின்னரே இலங்கை வீரர்கள் முழு நம்பிக்கையை பெற்றனர். பும்ராவிற்கும் ராணாவிற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.

இதையும் படிங்க:இந்திய பவுலர்கள் ஆக்ரோஷமா நடக்கட்டும் பிரச்சனை இல்லை.. ஆனா சூர்யா செஞ்சது தப்பு – சல்மான் அலி ஆகா கருத்து

இந்திய அணி பாகிஸ்தான் அணியை முற்றிலுமாக வீழ்த்தும் அதில் அபிஷேக் ஷர்மா ஒரு முக்கிய வீரராக இருப்பார். ஆனால் அபிஷேக் ஷர்மா தோல்வி அடைந்தால் என்ன நடக்கும் என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள். சராசரி விதியின் படி நாளை அவர் தோல்வியடைந்தாலும் அவருக்கு பதிலாக கில், சஞ்சு சாம்சன், திலக் வர்மா போன்ற தரமான வீரர்களும் இருக்கிறார்கள். அவர் குறைந்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்” என்று அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -