“நானும் நெஹ்ராவும் பைத்தியக்காரர்கள், வித்தியாசமானவர்கள்!” – ஹர்திக் பாண்டியா சுவாரசிய பேச்சு!

0
156
Hardikpandya

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு புதிய அணியாக வந்த குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது.

குஜராத் டைட்டன்ஸ் அணியை உருவாக்குவதற்காக ஏலத்தில் பங்கேற்று இருந்த அந்த அணியின் தற்போதைய பயிற்சியாளர் ஆசிஸ் நெஹ்ரா பற்றி அப்பொழுது நிறைய விமர்சனங்கள் இருந்தது.

- Advertisement -

ஆனால் அந்த விமர்சனங்களை எல்லாம் உடைக்கும் விதமாக அபாயகரமான அணியாக உருவெடுத்தது குஜராத் டைட்டன்ஸ். எதிரணிகளை எழவே விடாமல் பல ஆட்டங்களில் வென்று கோப்பையையும் கைப்பற்றியது.

தற்பொழுது அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பயிற்சியாளர் ஆசிஸ் நெஹ்ரா உடனான தனது நட்பை குறித்து பேசுகையில் ” எனது வளர்ச்சியில் ஒரு முக்கியமான நபர் ஆஷூ பாய். நாங்கள் பைத்தியக்காரர்கள் மற்றும் வித்தியாசமான நபர்கள். ஆனால் விளையாட்டுப் பற்றிய சிந்தனை உணர்வில் ஒரே மாதிரி ஆனவர்கள். அவர் என்னை நன்றாக வழி நடத்தினார்!” என்று கூறியிருக்கிறார்.

ஹர்திக் பாண்டியா கேப்டன்சி பற்றி பேசி உள்ள சுனில் கவாஸ்கர் “சில நேரங்களில் கேப்டன்கள் தங்கள் ஆளுமையையும் அணியின் ஆளுமையையும் ஒரே மாதிரி வைத்திருக்க முயற்சிப்பார்கள். கேப்டனுக்கும் அணிக்கும் ஆளுமை என்பது வித்தியாசமாக இருக்கலாம்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா தனது ஆளுமையை அணியின் மீது திணிக்கவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணியில் அவர் அப்படித்தான் கேப்டனாக செயல்படுகிறார். இது ஒரு கேப்டனாக அவரது பாரம்பரியமாக இருக்கலாம். கேப்டனாக அவர் எம் எஸ் தோனியை போலவே இருக்கிறார். மேலும் அவர் தனது முன்னாள் இந்திய கேப்டனிடம் இருந்து நிறைய நல்ல குணங்களையும் உள்வாங்கியும் இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!