400 இல்லனா 600 ரன்கள் அடிக்க வேண்டும் – நிதிஷ் ராணா அதிரடி!

0
399
Nitish Rana

ஐபிஎல் முடிந்து இந்திய அணியில் மூத்த வீரர்கள் நிறைய பேருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. அர்ஸ்தீப் சிங், தீபக் ஹூடா, ஆவேஸ் கான், இஷான் கிஷான், ருதுராஜ், ராகுல் திரிபாதி ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்தது.

ஆனால் கடந்த ஆண்டு ராகுல் டிராவிட் பயிற்சியில் ஷிகர் தவான் தலைமையில் இலங்கை அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் வாய்ப்பு பெற்ற, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் இளம் இடதுகை பேட்ஸ்மேன் நிதீஷ் ராணாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

இவருக்கு கடந்த முறை இலங்கை அணியுடனான கிடைத்த வாய்ப்பில் இவர் சரியாக செயல்படவில்லை. அதே சமயத்தில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக 14 ஆட்டங்களில் 393 ரன்கள் சேர்த்திருந்தார். ஐபிஎல் தொடருக்கு பிறகு ஐதராபாத் அணியில் மூன்றாவது வீரராக பேட்டிங்கில் வந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு 400 ரன்களுக்கு மேல் குவித்த ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு கிடைக்க இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

தற்போது இதுகுறித்து நிதீஷ் ரானா தெரிவிக்கையில் ” ஒரு கிரிக்கெட் வீரராக நான் இன்னொரு வாய்ப்பை விரும்பினேன். ஆனால் நான் எந்த காரணத்தையும் கூற விரும்பவில்லை. ஏனென்றால் நான் நன்றாக விளையாடவில்லை. அடுத்த ஐபிஎல் சீசனில் 500 ரன்களுக்கு மேல் எடுக்க விரும்புகிறேன். அப்படி செய்தால் தேர்வாளர்கள் என்னை புறக்கணிக்க முடியாது. நிறைய ரன்களை குவித்து அணிக்குள் வர முடியும் என்பதே என் கையில் இருக்கும் விஷயம். நான் இதில் முன்னேற விரும்புகிறேன். அடுத்து வரும் ஐபிஎல் தொடரில் நான் நிறைய ரன்களை குவிப்பேன் என்று நம்புகிறேன். ஆனால் எதுவும் நம் கையில் இல்லை. நான் சிறந்ததை கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன். நான் எங்கு விளையாடினாலும் 100 சதவீத என் உழைப்பை கொடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நான் 400 ரன்களை எடுத்து இந்திய அணியில் தேர்வாக முடியவில்லை என்றால், நான் அடுத்து ஆறு நூறு ரன்களை எடுக்க வேண்டும். அதை இப்போது தான் நான் புரிந்து கொண்டேன். எதிர்காலம் என்னிடம் இருக்கிறது நான் அதற்காக தற்போது வேலை செய்து வருகிறேன். பெரிதாக எந்த இலக்குகளையும் வைத்துக்கொள்ளவில்லை. உள்நாட்டு தொடரில் நன்றாக விளையாட வேண்டும். நடப்பு ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாட வேண்டும் அவ்வளவுதான்” என்றவரிடம் ஐபிஎல் குறித்தும் கொல்கத்தா அணி குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது.

- Advertisement -

அதற்கு பதில் அளித்த அவர் ” ஐபிஎல் தொடர் எங்களுக்கு வெற்றிகரமாக அமையவில்லை. இந்த மிக விரைவான ஆட்டத்தில் எங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சிறப்பாக விளையாடி கோப்பையை உயர்த்துவோம் என்று நம்புகிறேன். அடுத்த ஆண்டு ஐபிஎல் மினி ஏலத்தில் நாங்கள் சில பல வீரர்களை எடுத்தாக வேண்டும். அதே சமயத்தில் அணியில் உள்ள உள்நாட்டு வீரர்கள் உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால் அது அணிக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கும்” என்றும் தெரிவித்தார்!