இந்திய அணி இங்கிலாந்தில் தோற்பதற்காக வருகிறது என்று கூறிய மைக்கேல் வாகனை, நேற்று இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மிகக் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்று இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் கில் இருவரும் சதம் அடித்திருக்கிறார்கள். ரிஷப் பண்ட் அரைசதம் அடித்திருக்கிறார். இந்திய அணி முதல் நாள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்து இருக்கிறது.
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து பேசி இருந்த மைக்கேல் வாகன் மீண்டும் ஒருமுறை இந்திய அணி இங்கிலாந்தில் தோற்பதற்காக வருகிறது என்று கூறியிருந்தார். இந்த தொடரை இங்கிலாந்து அணி மூன்றுக்கு ஒன்று என மிக எளிதாக கைப்பற்றும் என்றும் கணிப்பு தெரிவித்திருந்தார். இது அப்போதே இந்திய ரசிகர்களால் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சு யூனிட் மிகவும் பலவீனமாக இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது. மைக்கேல் வாகனின் கருத்து மற்றும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு யூனிட் இரண்டையும் நவ்ஜோத் சிங் சித்து தன்னுடைய பாணியில் விமர்சனம் செய்திருக்கிறார்.
இதுகுறித்து நவ்ஜோத் சிங் சித்து கூறும் பொழுது “முட்டாள்கள் எப்பொழுதும் தண்ணீர் கூட ஊற்றாமல் தானாகவே வளர்கிறார்கள். மைக்கேல் வாகன் உங்களுடைய கணிப்புகள் எப்பொழுதும் தவறானவையாகவே இருந்திருக்கிறது. இந்த முறை இந்தியா குறித்து சொன்ன கணிப்பும் தவறாகவே அமையப் போகிறது”
இதையும் படிங்க : கருப்பு நிற சாக்ஸ்.. வினோதமாக சிக்கிய கேப்டன் கில்.. நடுவரின் கையில் தண்டனை.. விதி என்ன சொல்கிறது?
“உங்களுடைய பந்துவீச்சை பாருங்கள் உங்களுடைய பவுலர்கள் ஏதோ வழிப்போக்கர்கள் மாதிரி இருக்கிறார்கள். அதாவது எங்களுடைய இந்திய பேட்ஸ்மேன்கள் மூன்று பேர் வந்து உங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்களை சுழல் பந்துவீச்சாளர்களை அடிப்பது போல் அடிக்கிறார்கள். ஒரு கோழி கூட முட்டையிடும் பொழுது கொஞ்சமாக கத்துகிறது. ஆனால் உங்கள் தரப்பில் ஒரு சிறு சத்தம் கூட கிடையாது” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.