இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுக்மன் கில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கருப்பு நிற சாக்ஸ் அணிந்து விளையாடியதால் தண்டனைக்கு உட்படுவார் என செய்திகள் தெரிவிக்கிறது.
நேற்று துவங்கிய இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடியுள்ள இந்திய கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்து 127 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆசியா தாண்டியும், கேப்டனாகவும், பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்திலும் முதல்முறையாக வந்திருக்கும் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
கில் செய்த காரியம்
நேற்றைய போட்டியில் இந்திய கேப்டன் கில் கருப்பு நிற கால் உறை அதாவது சாக்ஸ் அணிந்திருந்தார். இது கிரிக்கெட் ஆடை மற்றும் உபகரணங்கள் விதியின் படி தவறான விஷயம் ஆகும். ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெள்ளை அல்லது இளம் சாம்பல் நிற சாக்ஸ் மட்டுமே அணிய வேண்டும் என எம்சிசி விதியை 2023 ஆம் ஆண்டு வகுத்திருக்கிறது.
ஐசிசி ஆடை மற்றும் கிரிக்கெட் உபகரணங்கள், ஒழுங்கு முறைகளின் விதி 19.45ன் கீழ் கருப்பு நிற சாக்ஸ் அணிந்து விளையாடியது, விதியை மீறியதாக இருக்கிறது. ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் கிரீஸ் கெயில் கருப்பு நிற பேட்டை பயன்படுத்தியது, கேஎல்.ராகுல் தரம் குறைவான ஹெல்மெட்டை பயன்படுத்தியதற்கு தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தண்டனை கிடைக்குமா? தப்பிக்க முடியுமா?
தற்போது கில்லுக்கு தண்டனை தருவது நடுவரின் கையில் இருக்கிறது. அவர் இதை லெவல் 1 குற்றமாக கருதினால், நெல் உடைய போட்டி கட்டணத்திலிருந்து 10% முதல் 50% வரை அபராதம் விதிக்க முடியும். இல்லை நடுவர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால், கில் தண்டனையிலிருந்து தப்பிப்பார்.
இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் சதம். முன்னவே என்கிட்ட சொல்லிட்டார்.. இப்ப ஒரு விஷயத்தை உங்களுக்கு சொல்லுவார் – ஜூரல் ஜெய்ஸ்வால் பேட்டி
மேலும் தன்னுடைய வழக்கமான சாக்ஸ் காணாமல் போய்விட்டது, அல்லது ஈரமாக இருந்தது எனவே அதை பயன்படுத்த முடியாத காரணத்தினால் கருப்பு நிற சாக்ஸை பயன்படுத்தினேன் என கில் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டால் நடுவர் அதை ஏற்றுக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலமும் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம்.






