டி20 உலகக் கோப்பை 2024

இவருக்காக அக்சர் படேல வெளிய வைங்க.. இப்ப ரோகித்துக்கு இக்கட்டான நிலைமை – நவ்ஜோத் சிங் சித்து கருத்து

தற்போது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா வெஸ்ட் இண்டீஸ் என இரு நாடுகளில் நடைபெற்ற வருகின்ற காரணத்தினால் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் 2 விதமான திட்டங்களை பின்பற்றிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் அக்சர் படேலை நீக்கலாம் என்று அதிரடியாக நவ்ஜோத் சிங் சித்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி முதல் சுற்றில் அமெரிக்கா நியூயார்க் மைதானத்தில் மூன்று போட்டிகளையும், ஒரு போட்டியை அமெரிக்கா டல்லாஸ் மைதானத்திலும் விளையாடுகிறது. இந்த இரண்டு மைதானங்களும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கின்றன.

இதன் காரணமாக இந்திய அணி நிர்வாகம் யாரும் எதிர்பார்க்காத வகையில் குல்தீப் யாதவை நீக்கிவிட்டு, இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரை வைத்து விளையாடிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அமெரிக்க அணிக்கு எதிராக அக்சர் படேலை நீக்கலாம் என்று நவ்ஜோத் சிங் சிந்து கூறி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும்பொழுது “அமெரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி எந்த பரிசோதனை முயற்சிகளையும் செய்ய வேண்டியது கிடையாது. ஏனென்றால் அவர்கள் வெற்றி பெறும் அணியாக இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு நல்ல ரிதமும் இருக்கிறது.

- Advertisement -

இங்கு மிக முக்கியமான விஷயமே ஒரு காம்பினேஷனை செட் செய்வதுதான். தற்பொழுது இந்திய அணிக்கு ஒரு நல்ல காம்பினேஷன் கிடைத்திருக்கிறது. எனவே இதை இந்திய அணி முறியடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

இதையும் படிங்க : இந்தியா அமெரிக்கா போட்டி.. இந்த காரணத்தினால் ரொம்ப எமோஷனலா இருக்கும் – தமிழக வீரர் பாலாஜி பேட்டி

அதே சமயத்தில் இரண்டு சுழல் பந்துவீச்சு பேட்ஸ்மேன்கள் தேவை இல்லை என்று இந்திய அணி நினைத்தால், அக்சர் படேல் இடத்தில் குல்தீப் யாதவை விளையாட வைத்து பார்க்கலாம். அவர் ஒரு நல்ல மாற்றமாக இருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் அக்சர் படேல் கடந்த ஆட்டம் நன்றாக விளையாடியிருக்கிறார். எனவே இது ரோகித் சர்மாவுக்கு ஒரு இக்கட்டான நிலைமை. மற்றபடி வேறு யாரையும் கொண்டு வந்து காம்பினேஷனை மாற்ற தேவையில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts