சமூக வலைதளம் மூலம் விராட் கோலிக்கு பதிலடி கொடுத்த நவீன் உல் ஹக்!

0
389

இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன . மார்ச் 31ம் தேதி முதல் மே மாதம் 28ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடர்களில் தற்போது வரை 43 ஆட்டங்கள் முடிந்திருக்கிறது .

இந்த 43 ஆட்டங்களின் முடிவில் குஜராத் அணி முதல் இடத்திலும் லக்னோ அணி இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் முறையே ராஜஸ்தான் அணியும் சென்னை அணியும் இடம் பெற்று இருக்கின்றன .

- Advertisement -

நேற்று லக்னோவில் நடைபெற்ற 43 வது போட்டியில் லக்னோ அணியும் பெங்களூர் அணியும் மோதின . இந்தப் போட்டியின் முடிவில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை தோற்கடித்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது .

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் களுக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த பெங்களூர் அணி சிறப்பான பந்துவீச்சின் மூலம் லக்னோ அணியை 108 ரன்கள் செய்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது . இந்தப் போட்டியில் ஆட்டநாயகனாக பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டுப்ளசிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான போட்டி பரபரப்பாக இல்லாவிட்டாலும் போட்டிக்கு பின் நடைபெற்ற மோதல் சமூக வலைதளங்கள் முதல் அனைத்து இடங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது . ஆப்கானிஸ்தான் அணியின் இளம் பேகப் பந்துவீச்சாளர் நவீன்உல் ஹக் மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இடையான மோதல் நேற்றைய போட்டியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது .

- Advertisement -

இந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்திருந்த விராட் கோலி நீங்கள் கொடுத்தது உங்களுக்கே திரும்ப வரும் . அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருங்கள் . ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் நீங்கள் யாருக்கும் கொடுக்காதீர்கள் கூறியிருந்தார் .

விராட் கோலியின் இந்த கருத்துக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் ஆப்கானிஸ்தானின் இளம்வயதுபந்துவீச்சாளர். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இது குறித்து பதிவிட்டுள்ள நவீன்உல் ஹக் உங்களுக்குத் தகுதியானதை நீங்கள் பெறுவீர்கள், அது எப்படி இருக்க வேண்டும், அப்படித்தான் கிடைக்கும்” என்று பதிவிட்டு விராட் கோலியின் கருத்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் .