ஒரே ஓவரில் இந்திய அணியின் இரண்டு பெரிய விக்கெட்டுகளை சாய்த்த நவதீப் சைனி – இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் லெய்செஸ்ட்டர்ஷிர் அணி

0
183

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இரு அணிகளுக்கு இடையே 5வது டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கின்றது. அதனையொட்டி கவுண்டி தொடரில் விளையாடி வரும் லெய்செஸ்ட்டர்ஷிர் அணியுடன் தற்போது இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடி கொண்டிருக்கிறது. லெய்செஸ்ட்டர்ஷிர் அணியில் இந்திய வீரர்கள் புஜாரா ரிஷப் பண்ட் ஜஸ்பிரித் பும்ரா பிரசித் கிருஸ்ணா என ஒரு சில இந்திய வீரர்கள் இடம்பெற்று விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்து டிக்லேர் செய்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரீகர் பரத் 70* ரன்கள் எடுத்த நிலையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் விளையாடிய லெய்செஸ்ட்டர்ஷிர் அணி முதல் இன்னிங்சில் 244 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது அந்த அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 76 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்த நிலையில் விளையாடி வருகிறது. லெய்செஸ்ட்டர்ஷிர் அணியில் வந்து வீசிவரும் நவ்தீப் சைனி பட்டைய கிளப்பிக் கொண்டு வருகிறார்.

ஒரே ஓவரில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை சாய்த்த சைனி

தற்பொழுது அதிரடியான பார்மில் இருக்கும் நவதீப் சைனி இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் கில்லை அவுட் ஆக்கினார். பின்னர் ஒரே ஓவ ரில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரீகர் படத்தை முதலில் அவுட் ஆக்கினார். பின்னர் அதே ஓவரின் 3-வது பந்தில் ரவீந்திர ஜடேஜாவை டக் அவுட் ஆக்கினார்.

- Advertisement -

மூன்று பந்துகளில் இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை நவதீப் சைனி ஏற்படுத்தியுள்ளார். அவர் ஒரே ஒரு ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.