அடுத்தடுத்து மூன்று செக் வைத்த நாதன் லயன் ; திடீரென்று சரிந்த இந்திய அணி!

0
712
Lyon

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது!

நேற்று தொடங்கிய இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்தது. உஸ்மான் கவஜா, ஹோன்ட்ஸ்கோம் இருவரும் தலா 81, 72 ரன்கள் எடுக்க 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முகமது சமி நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார் .

- Advertisement -

இதை அடுத்து நேற்று விளையாடிய இந்திய அணி ஆட்டநேர முடிவில் விக்கெட் ஏதும் இழக்காமல் 21 ரன்களை எடுத்து இருந்தது. இந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது!

இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் ஸ்பெல்லில் சீராக விளையாடிய இந்திய துவக்க ஜோடி, இரண்டாவது ஸ்பெல்லில் நாதன் லயன் வர தடுமாறியது. இன்னொரு முனையில் ஆஸ்திரேலிய அணி இரண்டு ரிவ்யூவை வீணாக்கியது!

இந்த நேரத்தில் கே எல் ராகுலை எல்பி டபிள்யு முறையில் லயன் வெளியேற்ற, அடுத்து ரோகித் சர்மாவை போல்ட் முறையில் வெளியேற்றினார். தொடர்ந்து நூறாவது டெஸ்டில் விளையாடும் புஜாராவை ரன் ஏதும் எடுக்க விடாமல் காலி செய்தார்.

- Advertisement -

நாதன் லயன் வைத்த இந்த அதிரடி மூன்று செக்குகளால் இந்திய அணி தற்போது 55 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. களத்தில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் இருவரும் இணைந்து இருக்கிறார்கள்!