“ஓபனா சொல்றேன்.. அந்த சிஎஸ்கே வீரர்தான் பியூச்சர் சூப்பர் ஸ்டார்.. செம பேட்டிங்” – நாதன் லயன் பேட்டி

0
396
Lyon

தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட் உலகத்தில் வெளிப்படையாக மிகச் சிறந்த ஸ்பின்னர்களாக இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் இருவர்தான் மிகச் சிறந்தவர்களாக இருந்து வருகிறார்கள்.

நீண்ட காலத்திற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது அணிக்காக பங்காற்றக்கூடிய, எல்லா சூழ்நிலைகளிலும் விக்கெட் கைப்பற்ற கூடிய திறன் வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர்களாக தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர்களை தவிர வேறு யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

- Advertisement -

மேலும் பந்துவீச்சில் ஆப் ஸ்பின் வகைமையில் சிறப்பு பந்துவீச்சாளர்களாக இவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களது காலத்திற்குப் பிறகு இந்த வகையில் கவனம் இருக்கும் வகையில் யார் வருவார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் உள்நாட்டில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற பெருமைக்குள் நுழைந்தார்.

இதற்கு அடுத்த தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்கின்ற சிறப்பை பெற்றுக் கொண்டார்.

- Advertisement -

இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நாதன் லயன் முதல்முறையாக முறையாக ரச்சின் ரவீந்திராவுக்கு எதிராக பந்துவீசி இருக்கிறார். இன்று சிறப்பாக விளையாடிய அவர் அரை சதம் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார். மேற்கொண்டு நியூசிலாந்தின் வெற்றிக்கு 258 ரன்கள் தேவைப்பட கைவசம் ஏழு விக்கெட்டுகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாதன் லயன் ரச்சின் ரவீந்தரா குறித்து கூறும் பொழுது “உங்களுக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் சரியானவர்களுக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும். ரச்சின் ரவீந்திரா இன்று சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினார் என்று நான் நினைக்கிறேன். நான் அவருக்கு முதல் முறையாக பந்து வீசி இருக்கிறேன். அவர் ஒரு நல்ல பேட்ஸ்மேனாக தெரிகிறார். உலகக்கோப்பையில் இந்தியாவில் மிகச் சிறப்பாக விளையாடினார். நிச்சயம் அவர் ஒரு சூப்பர் ஸ்டாராக இருப்பார்.

இதையும் படிங்க : வீடியோ.. “சும்மா இரேன்பா” கிரிக்கெட் உலகில் இப்படி ஒரு பீல்டிங் பார்க்கவே முடியாது

பந்து நன்றாக சுழலும் பொழுது, அது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம். நியூசிலாந்தில் பந்து சுழல்வது குறித்து நான் பெரிதாக ஆச்சரியப்படவில்லை. ஏனென்றால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடந்த டெஸ்ட் தொடரில் மிட்சல் சான்ட்னர் நியூசிலாந்துக்கு விளையாடினார்” என்று கூறி இருக்கிறார்.