விராட் ஜெய்ஸ்வால் எங்களுக்கு தந்தது.. நான் பார்த்ததுல சிறந்த பார்பிக்யூ – நாதன் லயன் கருத்து

0
1074
Lyon

இன்று இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் ஜெய்ஸ்வால் விக்கெட் தங்களுக்கு பரிசாக கிடைத்தது என ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் தெரிவித்திருக்கிறார்.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு ஸ்மித் 140 ரன்கள் எடுக்க, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவித்தது. இந்திய அணி இன்று இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்திருக்கிறது.

- Advertisement -

ஜெய்ஸ்வால் தந்த திருப்புமுனை

இன்று இந்திய அணி தனது முதல் இன்னிசை விளையாடிய போது கேப்டன் ரோஹித் சர்மா 3, கேஎல் ராகுல் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இருவரும் சேர்ந்து 158 பந்து 12 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவான நிலையில் இந்திய அணியை மேற்கொண்டு எடுத்து சென்றார்கள்.

இப்படியான நிலையில் இன்று போட்டி இரண்டாவது நாளில் முடிவடைவதற்கு 20 நிமிடங்களே இருந்த பொழுது, இந்த ஜோடி எந்தவித சிக்கலும் இல்லாமல் இந்த நாளை முடித்து கிளம்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படியான நிலையில் ஜெய்ஸ்வால் தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு 82 ரன்னில் தன் விக்கெட்டை கொடுத்தார்.

- Advertisement -

ஆறு ரன் மூன்று விக்கெட்

இந்த நிலையில் இந்திய அணி 153 ரன்னில் இருந்து 159 ரன்னில் மூன்று விக்கட்டுகளை இழந்துவிட்டது. இன்றைய நாள் முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் என்ற பரிதாப நிலைக்கு ஜெய்ஸ்வால் ரன் அவுட்டால் தள்ளப்பட்டது. சிறப்பான முறையில் இரண்டு விக்கெட் இழப்புக்கு போட்டியை முடித்திருக்க வேண்டிய இந்திய அணி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது.

இதையும் படிங்க : வெறும் 28 ஓவர்.. தீப்தி சர்மா அரிய சாதனை.. வெஸ்ட் இண்டீஸ் ஒயிட் வாஷ்.. இந்திய பெண்கள் அணி அபார வெற்றி

இதுகுறித்து நாதன் லயன் தெரிவிக்கும் பொழுது ” ஜெய்ஸ்வால் விக்கெட் அனேகமாக நான் பார்த்த பார்பிக்யூகளில் சிறந்த ஒன்று. இன்று அவரது விக்கெட் எங்களுக்கு சிறப்பு பரிசாக கிடைத்தது. அது நீல நிறத்தில் இருந்து எங்களுக்கு வந்தது. இதற்கான அழுத்தத்தை எங்களால் அவர்களுக்கு உருவாக்கவும் முடிந்தது. இப்படியான சில்லியான அவுட் பயிற்சியாளர்களை கடுமையாக கோபம் அடைய வைக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -